பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போருக்குப் போகும் போது, அப்படைக்கு முன்னே செல்லும் வீரமிக்கவனவன். இதல்ை இவன் படையினே எதிரிகளின் படை எதிர்க்க முடியாமல் இருந்தது. இவன் போரில் மிகுதி யாய் ஈடுபட்டதல்ை, இவனைத் தன் நாடாகிய குதிரை மலேயில் காணுதல் என்பது அரிதாகும் என்றும் கூறப்பட்டுள்ளான். இன்னமும் இவ னது கொடையும் வீரமும் மிகுதியாகப் புலவர் களால் பாடப்பட்டுள்ளன. இவன் கொடை யினைக் காரிக்கண்ணனர் மிகமிகச் சிறப்பாகப் போற்றிப் பாடியுள்ளார். இவன் கொடுக்கும் நேரம், குறிப்பிட்ட ஒரு நேரம் அன்று. இவன் இரப்பவர் என்று சென்ருலும், எப்பொழுது சென்ருலும் கொடுத்து வந்த கொடையாளி : ஒரு முறை சென்று பரிசு பெற்றவர் பின்னரும் இவனைத் தேடிப் பரிசு பெற வந்துற்ருலும், முன்னரே பரிசு பெற்றுள்ளிரே ! மீண்டும் ஏன் பரிசில் பெற இங்கு வங்திர் ? என்று கூறி இரவலர் மனத்தைப் புண்படுத்தாத புண்ணி யன் , தினந்தினம் சென்று கேட்பினும், ஈயும் இன்குணம் படைத்தவன். இவன் தன் கடமை யை மிக நன்ருகச் செய்தவன் ; தான் பணி புரிந்த சேரமன்னன் உளங்களிக்கும் வண்ணம் போர் செய்து புகழ் பெற்றவன். இவனே நா, வந்தவர் இவனது மாட்டுத் தொழுவத்தில் காணப்படும் மாட்டின் தொகுதியை ஒரு சேரத் தமக்கு வேண்டும் என்று கேட்டாலும் சிறிதும் தயக்கம் இன்றி, ஒன்றேனும் தனக்கு இருக்கட்

தொ.-4