பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டும் என்று வைத்துக்கொள்ள எண்ணுமல், கேட்டவர் உளங்களிக்க எல்லா எருதுகளையும் ஈந்து மகிழும் இன்குணன்; இப்படியே இவனது விளேபுலத்தில் விளைந்த நெற்குவியல்கள் அனைத் தையும், 'கொடுத்துவிடுக என்று கேட்பி னும் கொடுக்கும் அத்துணே வள்ளன்மை மிக்கவன். இவற்றைவிட இவனது கொடைக் குணத்திற்கு வேறு என்ன கூற இயலும் ? இத் தகைய வீரமும் கொடையுமுடைய பிட்டங்கொற். றனை வடம் வண்ணக்கன் தாமோதரனர் எம் முறையில் சிறப்பித்துள்ளார் என்பதை ஈண்டுக் காண்போம். -

வடமவண்ணக்கன் தாமோதரனர் பிட்டங் கொற்றனைப்பாடி வாழ்த்தும் போது, அவனே மட்டும் வாழ்த்தாமல், அவன் தலைவனுகிய சேரமான் கோக்கோதை மார்பனையும் உடன் சேர்த்து வாழ்த்தியிருப்பது, இவரது பரந்த உள்ளிக் கிடக்கையினை உணர்த்தி நிற்கின்றது. அக்கோதையும் வாழ்ந்தால்தான் என்றும் தம்மைக் காக்கும் தலைவனம் பிட்டங்கொற்ற னும் நன்கு வாழ இயலும் என்று கருதி, இங்ங்னம் உடன் சேர்த்து வாழ்த்தினர் போலும் ! பிட்டங்கொற்றன் நல்வாழ்வு, தாம் நன்கு வாழ் தற்கு ஏதுவாகும் அல்லவா? இதேைலதான் புலவர் கோதையையும் வாழ்த்தியுள்ளார்.

பிட்டங்கொற்றனது பீட்டுக்குக் காரணம் அவன் பிடித் திருந்த வேலே ஆகும். அதுவே