பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகைவர் உடலங்களேக் கிழித்து அவனுக்குப் பெருமை தந்து வந்தது. ஆகவே, அதனையும் புலவர் உளமார வாழ்த்துகின்ருர். ஆ ! இப் புலவரது நுண்ணறிவுத் திறனே என் என்பது ! பிட்டங்கொற்றனே வாழ்த்தினர். அவனது வேலே வாழ்த்தினர். அவனுக்குத் தலைவனும் சேர மன்னனேயும் வாழ்த்தினர். இவ்வாறு வாழ்த்தி யது சாலப் பொருத்தமே ஆகும். ஆல்ை, புலவர் இந்த அளவில் தம் வாழ்த்தைக் கூறி முடித்தார் அல்லர். சேரன் பகை மன்னரும் வாழ்க என்று வாழ்த்தியிருப்பதுதான் இவரது நுண்ணறிவுத் திறனே நாம் நுணுகி ஆராய்தற் குத் துணை செய்வதாகும். பகை மன்னர் பிட்டங்கொற்றல்ை கொல்லப்பட்டனராயின், அத்துணேப் பயன் ஏற்படாது. அம்மன்னர்கள் போருக்கு ஆற்ருது தோல்வியுறச் செய்து, பின் னர்த் தம் தோல்விக்கு அறிகுறியாக ஆண்டு தோறும் திறைப்பொருளேக் (கப்பப்பொருளை) கட்டி வருவாராயின், சேரனது பொருள் வரு வாய் மிக்கு நிற்கும் அன்ருே ? இது குறித்தே “ பகை மன்னரும் வாழ்க பல்லாண்டு !! என்று தம் வாழ்த்தினே அவர்களுக்கும் உடன் சேர்த்து உரைத்தனர். இதோ பாருங்கள் இவர் வாழ்த் திய வாழ்த்து மொழிகளே :

“ வன்புல நாடன் வயமான் பிட்டன்

ஆரமர் கடக்கும் வேலும் அவன் இறை மாவண் ஈகைக் கோதையும் மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே'