பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[52].

என்னும் அடிகளே வாழ்த்து மொழிகள் அடங் கிய அடிகள். " வலிய நிலமாகிய மலைநாட்டை யுடையவனும், வலிய குதிரை மலேக்குத் தலைவ னும் ஆகிய பிட்டனும், அவனது பொருதற்கரிய போரை வெல்லும் வேலும், அவன் தலைவனகிய வண்மை மிக்கவனகிய சேரமன்னனும், அவ ைேடு பகைத்த வேந்தரும் நெடிது வாழ்க !' என்பதே இவ்வாழ்த்து அடிகளின் பொருள். பிட்டங்கொற்றன்கீழ் வாழுமக்கள் குறைவின் றிக் குதுரகலமாய் இருப்பார்கள் என்பதும், இப் புலவர் பாடிய பாடலால் குறிப்பாகத் தோன்று கிறது. ஆர்வத்தோடு இவர், “ஏற்றுக உலேயே! ஆக்குக சோறே ! அன்னவை பிறவும் செய்க!” என்று பாடியிருப்பதன் மூலம் இதனை அறிய ல்ாம். 'அன்னவை பிறவும் செய்க! என்பது, பூசுவன பூசுக பூண்பன பூண்க : உடுப்பன உடுக்க, என்பதாம். இந்தவிதம் தன்கீழ் வாழ் நரும் தன்னைப் பாடி வருகரும் மகிழும் வண்ணம் பிட்டங்கொற்றன் உதவி புரிந்தவன் என்பது புலனுகின்றதல்லவா ? இவை அனைத்தினையும் ஒருங்கே புலப்படுத்திய புலவர் பெருமானர் புலமைப் பெருக்கை நாம் பாராட்டவேண்டும் அன்ருே ?