பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. உறையூர் இளம்பொன் வாணிகனுர்

உறையூர் இளம்பொன் வாணிகளுர் இயற் பெயர் நமக்குத் தெரிந்திலது இவர் மேற் கொண்ட தொழில் காரணமாக ஏற்பட்ட கார ணப்பெயரே நமக்குத் தெரிந்துள்ளது. இவர் தம் வாழ்க்கையினே இனிது நடத்த வாணிகத் தொழிலே மேற்கொண்டிருந்தார். அவ்வாணிக மும் பொன்னே விற்றும் வாங்கியும் செய்துவந்த வாணிகமாய் இருந்திருக்க வேண்டும். இவர் பொன் வாணிகம் செய்தவர் என்பது, இவர் பொன் வாணிகளுர் என்று குறிப்பிடப்பட்ட தல்ை உணர்ந்துகொள்ளலாம். இவர் வயதில் முதியவராய் இருந்திருக்கமாட்டார். இவ்வாறு கூறுதற்குக் காரணம், இளம்பொன் வாணிகனர் என்று இவர் வழங்கப்பட்டமையால் புலனுகிறது.

இவரது ஊர் உறையூர். அதன் சிறப்பை உறையூர் மருத்துவன் தாமோதரனர் என்னும் புலவர் வரலாற்றிற்காண்க. எனவே, ஊர்ப் பெயரையும் இணேத்து இவர் உறையூர் இளம் பொன் வாணிகளுர் என்று கூறப்பட்டுள்ளார்.

இவர் ஒரு புலவர் என்பதற்கு அறிகுறி, இவ ரால் பாடப்பட்ட பாடல் புறநானூற்றில் இடம்