பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்றிருப்பதே. அப்பாடல் ஒரு வீரன்மீது பாடப்பட்ட பாடலாகும். அது கையறு கிலே யாய் அமைந்த பாடல். கையறு கிலே என்பது புறப்பொருள் இலக்கணத்தில் வரும் ஒரு துறை யாகும். அது இறந்த ஒருவன் சுற்றத்தாரோ, நெருங்கிய நண்பர்களோ அவன் இறப்பதைக் கண்டு இரங்கிக் கூறுவதாகும்.

இப்புலவர் இங்குக் கூறியுள்ள பாடல் ஒரு வீர்ன் இறந்து பட்டமையின் அவனே இழந்த மையால் பாணர்கள் படுந்துன்பம் இன்னதாய் இருந்தது என்பதை அறிவிக்கும் முறையில் அமைந்துள்ளது. பாணர் இவன் இறப்பைக் குறித்து வருந்தினர் என்ருல், இவ்வீரன் பாணர் க்ளுக்கு உதவும் பெருங்கொடையாளய்ை இருந் திருக்க வேண்டும் என்பது ஊகிக்கப்படுகிறதல் லவா? நாம் ஊகிப்பது போலவே, இவ்வீரன் சிறந்த கொடையாளியாயும் இருந்திருக்கிருன். வீரம் உள்ள இடத்தில் ஈரம் இருக்கும்போலும் ! இனி உறையூர் இளம்பொன் வாணிகனர் எம் முறையில் இவ்வீரன் கொடைச்சிறப்பையும் ஏனைய கருத்துக்களையும் கூறியுள்ளார் என்ப தைக் காண்போம் :

இப்புலவர் பெருந்தகையார் தாம் பாடும் கை யறு நிலைத்துறையில் இறந்துபட்ட ஒரு வீர னுக்கு நடுகல் நடப்பட்டதையும் அதற்குச் செய் யப்பட்ட கோலத்தையும் குறித்து நன்கு அறி விக்கின்றனர்.