பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறந்தவரின் நினைவுக்கு அறிகுறியாகக் கல் நடுவர். அதனே அமைக்கும் முறையில் மிகுந்த விழிப்புக் கொண்டிருந்தனர் தமிழர் என்பதை நாம் ஈண்டு நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். எந்தக்கல் நாட்டுதற்கு உரியது என்பதை முத லில் ஆராய்ந்து, அத்தகைய கல்லேக் கொணர் தற்கு மலே செறிந்த இடத்திற்குச் செல்வர் ; அங்கிருந்து கொணர்ந்து அதனைச் செய்வன செய்து செம்மைப்படுத்துவர். இது நடுதல் சிறப்புச் செய்தற்கு முன் செய்யப்படும் முதற் செயலாகும். இதனேக் காட்சி என்பர். இரண் டாவதாக, நடுகல்லுக்குச் செய்ய வேண்டிய செயல், கால் கோள் விழாவாகும். கால் கோளாவது, இறந்தவன் புகழைக் கல்லில் பொறிப்பது.

மூன்ருவதாகச் செய்யப்படுவது நீர்ப்படை யாகும். நீர்ப்படையாவது கால் கோள் விழா நடந்த பிறகு அக்கல்லினே நீராட்டுவது.

இதற்கு அடுத்ததாகக் கல்லின நடுதற் சிறப்பு நடைபெறும். கல்லினே நடுதலாவது, இறந்தவனது புகழ் பொறித்த கல்லினைப் பூமியில் நடுதல் என்பதாம்.

ஐந்தாவது முறையில் இந்நடுகல்லுக்குச் செய் யப்படும் சிறப்புப் பெரும்படை என்பது. பெரும் படையாவது, நட்ட கல்லேத் தெய்வமாக்கி அதற்குமுன் சிறப்புடைப் பொருள்களைப்