பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[56 |

படைத்தலாகும். இக்காலத்தில் இதனைப் 'படையல் போடுதல் என்று கூறுகின்றனர்.

இறுதியாக இந்நடுகல்லிற்குச் செய்யப்படும் சிறப்பு, வாழ்த்து என்று கூறப்படும். வாழ்த் தாவது, இறந்த வீரன்பொருட்டு அவன் நினை வுக்கு அறிகுறியாக நடப்பட்ட கல்லில் அவ லுடைய பெயரும் பீடும் எழுதி நிலைநாட்டிய பின், அக்கல்லின வெறுங்கல் என்று எண்ணு ம்ல், அது தெய்வம் என்று கருதி, அதனைத் தெய்வமாக்கி வாழ்த்துவதாகும். ஆகவே, இறந்தவர்பொருட்டு நடுகல் அமைத்தல் என் ப்து, காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், பெரும்படை, வாழ்த்தல் என்ற இவ்வறுவகைச் சிறப்புக்களையும் முறையாகச் செய்வது என் பதை நாம் அறிதல் வேண்டும். இம்முறைப் படியே நம் முன்னேர்களான தமிழ்ப்பெருமக்கள் நீடுகற்சிற்ப்பின நடத்தி வந்தார்கள். அவர் கள் இவ்வாறு நடத்தி வந்தார்கள் என்ற ஒழுக லாற்றையே ஒல்காப் பெருமை வாய்ந்த தொல் காப்பியர், தம் இலக்கணமாகிய தொல்காப் பியத்துப் பொருள் அதிகாரத்தில்,

காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்,

சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை, வாழ்த்தல்என்று

இருமூன்று வகையில் கல்லொடு புணர o

என்று:நூற்பா ஒன்றில் விளக்கமாகக் கூறி