பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[57]

இத்தகைய நடுகல் விழா உறையூர் இளம் பொன் வாணிகளுர் குறிப்பிடும் வீரன் பொருட் டும் நடந்ததை நாம் அறியலாம். கல்லில் இவ் வீரனது பேரும் பீடும் எழுதப்பட்டன. அதற் குச் செம்மலர் மாலையும் மயிற் பீலியும் சூட்டப் பட்டன. இவ்வாறெல்லாம் இவ்வீரனுக்கு நடுகல் அமைக்கப்பட்டது என்பதைப் புலவர்,

செம்பூங் கண்ணியொடு, அணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித்து இனிகட் டனரே கல்லும்’

என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நடுகல் நடப்பெறும் நிலைக்கு இவ் வீரமகன் தன் வீரத்தில் சிறந்து விளங்கினன் என்பதும், இப்புலவர் பெருமானர் இவ்வீரனைப் பற்றிக் குறிப்பிடும் குறிப்பால் அறிந்துகொள்ள லாம். இவ்வீரன் எதிரிகள் கொண்டு சென்ற பசுக்களையும் கன்றுகளேயும் மீட்டு வந்தனன் என்ற வீரமேம்பாட்டினைக் கன்ருெடு, கறவை தந்து பகைவர் ஒட்டிய நெடுந்தகை என்று பாடியுள்ளார்.

இத்தகைய வீரன் இறந்தனன். ‘இவன் இறப்பை இவன் உயிருடன் இருக்கும் காலத்தில் உதவி பெற்றுச் சென்ற பாணரும் அவர்கள் சுற்றத்தாரும் அறியார். ஆதலால், அவன் இறந்த இந்த நாளும் வருவரோ ?' (அவர்கள்