பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. தண்காற்பூட்கொல்லனுர்

தண்காற்பூட்கொல்லனர் என்பவர் ஊர்ப் பெயராலும், தாம் மேற்கொண்ட தொழிற் காரணத்தாலும் பெயர் பெற்ற புலவர். தண் கால் என்பது ஒர் ஊரின் பெயர். இவ்வூர் பாண்டி நாட்டில் உள்ளதாகும். இவ்வூர் திருமால் திருக்கோயிலேக் கொண்ட சிறப்புடையது. இத் தலத்தைத் திருமங்கையாழ்வாரும் பூதத்தாழ் வாரும் பாடியுள்ளனர். அப்பாடல்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் உள்ளன. இவ்வூர் பாண்டி நாட்டுச் சாத்துருக்கு மேற்கே பதின் மூன்று கல் தொலைவில் உள்ளது. இத்தலத்துப் பெருமாள் தண்காலப்பன் என்றும், பெரு மாட்டி அன்ன நாயகி என்றும் வழங்கப்படுவர். இங்குத் திருக்கோயில் கொண்டுள்ள திருமால் கிழக்கு நோக்கி, நின்ற திருக்கோலத்துடன் அன்பர்கட்குக் காட்சி அளித்து வருகிருர். இப் பெருமாள் கோவில் குளம், பாப விசை தீர்த்தம் என்னும் பெயருடையது. இப்புலவர் இத் தகைய அருமை பெருமை வாய்ந்த ஊரினர் ஆதலின், தண்காற்பூட்கொல்லனர் என்று வழங் கப்பட்டனர்.

கொல்லர் என்னும் சொல் இருவகைத் தொழி லாளர் இனத்திற்கு இடப்பட்டுவரும் பெயராகும்.