பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[60

இரும்பு வேலே செய்யும் இனத்தாரைக் கருங் கொல்லர் என்பர். இவர்களே இது போது கரு மார் என்றும் குறிக்கப்பட்டு வருபவர். தட்டா ரும் பொற்கொல்லர் என்று கூறப்படுவர். இவர் கள் பொன்னேக்கொண்டு பொற்புறு பணிகளைச் செய்து தருவதால் இவ்வாறு கூறப்பட்டு வரு கின்ருர்கள். எனவே, இங்குக் குறிப்பிடப்படும் புலவர் பூண் கொல்லர் என்பார், ஆபரணங்களேச் செய்யும் தட்டார் இனத்தவர் என்பதை இவர் பெயர்க்கு முன் உள்ள பூண் என்னும் சொல் புலப்படுத்தி நிற்கிறது. பூணுவது ஆபரணம். எனவே, இவர் தண்கால் என்னும் ஊரைச் சேர்ந்த பொன் அணிகளைச் செய்து வந்த புலவர் என்பது அறியப்படுகிறது.

இவர் புலவர் என்பதைப் புறநானூற்றில் உள்ள இவரது பாடலால் அறிந்துகொள்ள லாம். இவர் பாடியுள்ள பாடல் ஒன்றே, அப்பாடல் இல்லறத்தின் மாண்பை இனிதின் எடுத்துக் கூறும் பாடலாகும். மக்கள் மேற். கொள்ள வேண்டிய இருபேரறங்களாகிய இல் லறம் துறவறம் என்பவற்றுள் இல்லறத்தின் சிறப்பு இப்புலவரால் எடுத்து இயம்பப்படுகிறது எனில், இவர் இல்லறத்தில் நன்கு ஈடுபட்ட இன் மொழிப் புலவர் என்றும் கூறலாம் அன்ருே ?

இப்புலவர் பெருமான் பாடியுள்ள புறநானூற் றுப் பாடலால் இவர் யாருடைய இல்லறத்தைச் சிறப்பிக்கிருர் என்பதை நாம் வெளிப்படையாக