பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[611

அறிந்துகொள்ள இயலவில்லே. ஆனால், இவர் பாட்டு நல்ல முறையில் இல்லறம் என்னும் கல் லறத்தை நடத்திய நல்லான் ஒருவனேப் பற்றிப் பாடப்பட்டது என்பது மட்டும் புலப்படுகிறது. இப்புலவர் சுட்டிக்காட்டும் இல்லறத்தான் ஒரு சிறந்த வீரய்ை இருக்க வேண்டும். அவ்வீரன் போர் முகத்துப் புறமுதுகு இடாமல் எதிர்த்து நின்று வெற்றி காணும் வீரன் என்பதும் விளங் குகிறது. அவன் வெற்றி வீரய்ைத் திகழ்ந்த காரணத்தால் அவன் தலைவன் அவனுக்கு யானைப் பரிசில் தந்து பாராட்டியிருக்கிருன் என்பதையும் நாம் அறிந்துகொள்ளலாம். அவ் வீரன் பரிசாகப் பெற்ற யானே பெருமை மிக்க தாய்த் தன் நெற்றியில் பொன்னல் ஆன பட்டம் அணியப்பட்டதாய் இருந்தது என்பதும் நாம் அறிதல் வேண்டும். இத்தனைக் குறிப்புக்களே யும் புலவர், தாம் பாடியுள்ள பாட்டில் விதந்து கூறியுள்ளார்.

இப்புலவர் கூறும் வீர மகனுக்கு வாய்த்த வாழ்க்கைத் துணைவி நல்ல பண்பாடு உடையவ ளாய்க் காணப்பட்டாள். மாசிலாக்குலத்து வந்த வளாய், வருவிருந்து உவப்ப ஊட்டும் நேசம் மிக உடையவளாய், கொழுநன் நினைப்பு அறிந்து ஒழுகும் நீர்மையளாய், பெற்றதே கொண்டு உவப்பவளாய்க் காணப்பட்டாள்; அவள் தன் இல்லம் நாடிவந்த இரவலர்க்கும் ஏனேயோர்க்கும் தயிருடன் கலந்த கூழையும், நல்ல உணவையும் உண்ணக் கொடுப்பவளாய் விளங்கினுள். அவள்