பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்தது என்பதை " அருமிளே இருக்கை யதுவே என்று இப்புலவர் கூறுவதால் தெரிந்து கொள்ளலாம். இப்புலவர் கூறும் உவமை அழ குடைய உவமையாகும். இவர் சேவலின் நெற்றிக்கு முண்முருங்கைப் பூவை உவமை காட்டுகிருர். 'கவிர்ப்பூ நெற்றிச்சேவல் என்ற அடியினைக்காண்க. கவிர் என்பது முண்முருங் கையாகும்.

இப்புலவர் பாடிய பாட்டில் ஒரு காட்சியும் காணப்படுகிறது. அக்காட்சி பூனேயும் பெட்டைக் கோழியும் அளிக்கும் காட்சியாகும். பூனே பெட் டைக் கோழியைப் பிடித்துத் தின்னப் பார்த்து, மெல்ல நடத்தலேப் பெட்டைக்கோழிகண்டு நடுங் கிப் பயந்து கூக்குரல் இடும் என்று இவர் தம் சொற்சித்திரத்தில் தீட்டியிருப்பது நாம் படித்து இன்புறுதற்குரிய பகுதியாகும். அதுவே,

'ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்

இருள்பகை வெரீஇய நாகுஇளம் பேடை

உயிர்நடுக்கு உற்றுப் புலாவிட்டு அரற்ற ’’

என்பது. இதன் பொருள், " ஊரின் பழைய வேலியைச் சார்ந்துள்ள, தான் கவர்ந்துகொள் ளுதற்குரிய கோழி முதலியவற்றைப் பார்த்து மெல்ல நடத்தலேயுடைய காட்டுப் பூனேயாகிய பகைக்கு அஞ்சிய இளைய பெட்டைக்கோழி, தன் உயிரின்மீது வைத்த விருப்பத்தால் நடுக்குற்றுத் தான் உண்ணத் தன் வாயில் வைத்திருந்த தசையையும் கீழே போட்டுக் கத்த என்ப தாம்.