பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 2 | அறுவை (ஆடை) வாணிகமாகவேனும், மற்றும் வெவ்வேருன வாணிகமாகவேனும் இருக்கலாம். ஆனால், இப்புலவர் சிகாமணியார் தானிய மணி களே விற்கும் வாணிகத்துறையினே மேற் கொண்டவர் ஆவார். இவர் தானிய வியாபாரி யாய் இருந்தவர் என்பதைக் கூலவாணிகன்’ என்ற அடைமொழி கொண்டு உணரலாம். கூலம் என்பது நெல் முதலிய தானியம் ஆகும்.

அடுத்தபடி நாம் இவர் பெயருடன் இனத்து வழங்கப்பட்டுள்ள மதுரை என்னும் சொல் லேக் குறித்தும் சீத்தலை என்னும் மொழியைக் குறித்தும் சிறிது ஆராய்ச்சி செய்ய வேண்டுப வராய் இருக்கிருேம். இவர், தாம்மேற்கொண்ட தானிய வியாபாரத்தினை மதுரையில் நடத்தி, அவ்வூரிலேயே வாழ்ந்து வந்தமையின் மதுரை என்னும் அடைமொழி சார்த்தி வழங்கப்பட்டு வந்தனர். சீத்தலைச் சாத்தனர் என்று ஏன் இவர் வ ழ ங் க ப் ப ட் டார் என்பதையும் ஈண்டே உணர்ந்துகொள்ளுதல் வேண்டும். சாத்தனர், சீத்தலைச் சாத்தனர் என்று பெயர் பூண்டமைக்கு நம் தமிழகத்தில் இரு காரணங்கள் இயம்பப் பட்டு வருகின்றன. ஒன்று, "சீத்தலே என்பது ஒர் ஊர். இவ்வூரில் சிறப்புற்று விளங்கிய தெய் வம் ஐயனர் என்பது. இவ்வையனர் தெய்வத் துக்குச் சீத்தலைச் சாத்தனர் என்ற பெயர் வழங்கப்பட்டுவந்தது. அப்பெயரையே இவர்க்கு இட்டு வழங்கினர் , என்று கூறப்பட்டு வருவது. சீத்தலைச் சாத்தனர் என்ற பெயருக்கு