பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனுர்

இளவேட்டனர் ஒரு புலவர். இவர் தொழில் வாணிகம். அவ்வாணிகம் துணிகளே விற்கும் வாணிகம் ஆகும். இவர் துணி வணிகர் என் பதை அறுவை வாணிகன் என்று இவரது பெயர்க்கு முன் கொடுக்கப்பட்டுள்ள அடை மொழிகளால் அறிந்துகொள்ளலாம். அறுவை என்பது ஆடையாகும். இத்தொழிலே இவர் மதுரையம்பதியில் நடத்தினர். இதனே, மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனர் என்று ஊர்ப் பெயரையும் சார்த்தி இவர் பெயர் வழங் கப்படுவதால் அறிந்துகொள்ளலாம். இவரது இயற்பெயர், இளவேட்டனர் என்பது நம் நினை வில் இருத்தல் வேண்டும். இளமையில் இவர் வீறுடன் இருந்தார் போலும் : இவர் ஒரு புலவர் என்பதற்கு இவர் பாடிய பாடல்கள் சான்று தருகின்றன. இவர் பாடல்கள் அகநானூற் றிலும், குறுந்தொகையிலும், நற்றிணேயிலும், புறநானூற்றிலும், திருவள்ளுவ மாலையிலும் காணப்படுகின்றன. இவரது பாடல் திருவள் ளுவமாலையில் காணப்படுவதால், இவர் திருக் குறளினிடத்திலும், அதன் ஆசிரியரிடத்திலும் பெருமதிப்புக் கொண்டிருந்தனர் என்பது நன்கு

5