பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெரியவருகிறது. இவர் திருக்குறளே வாயுறை வாழ்த்து என்று வாயாரப் புகழ்கிருர் வாயுறை வாழ்த்தாவது மக்கள் நல்வழிப்படுதற்குக் கூறப்படும் உறுதி மொழிகள் அடங்கிய வாழ்த் தாகும். இவர், ' வள்ளுவனர் எல்லா மக்களும் மனம் மகிழ்ந்து ஏற்றுக்கொள்ளும் வகையில், திருக்குறளே உரைத்தார், என்று மொழிகிருர்.

புறநானூற்றில் இவர் பாடியுள்ள பாடல் யார் மீது பாடப்பட்டது என்பது தெரிந்திலது. ஆனால், இவர் பாடியுள்ள செய்யுளின் ஈற்றடி, 'உரைசால் நெடுந்தகை ஒம்பும் ஊரே என்று முடிதலின், இதுவும் ஒருவன்மீது பாடப்பட் டிருக்க வேண்டும் என்பதை அறியலாம். அவ் வொருவன் பெயர் குறிப்பிடப் பெருமல் நெடுங் திகை என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கின் றது. அந்நெடுந்தகை நல்ல வள்ளன்மைக் குண முடையவன் என்பது இரவலர்க்கு இல்லை என் துை குறைவுபடாது ஈந்தவன் என்று கூறப்பட் டிருப்பதிலிருந்து உணர்ந்துகொள்ளலாம். இப் படிக் குறைவு இல்லாது ஈந்த கோமகனப் அந் நெடுந்தகை இருந்தமையால்தான், புலவர் பாடும் புகழினைப் பெற்று விளங்கி நின்ருன். இதனால் தான் உரைசால் நெடுந்தகை என்று உரைக்கப் பட்டான்.

அங்கெடுந்தகை ஒர் ஊருக்குத் தலைவனாகவும் இருந்திருக்கிருன். அதனே அவன் கண்ணும் கருத்துமாகக் காத்து வந்திருக்கிருன். அவ்வூர்