பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[67).

பல சிற்றுரர்களேயும், அச்சிற்றுார்களுக்கேற்ற குடி மக்களேயும் கொண்டது. அச்சிற்றுாரில் வாழ்பவர் தம்கடமையினே மறவாதவர் ; போரில் புறமுதுகு காட்டி ஓடாது, பகைவரை எதிர்த்து நின்று போரிட்டுப் பூத உடல் நீத்துப் புகழ் உடல் பெற்ற வீரர்கட்கு நடுகல் கட்டு வழிபாடியற்றிய வண்குடி மக்கள் ஆவார்கள்.

நடுகல்லாவது, போரில் இறந்தவரின் பீடும் பேரும் எழுதிய கல். அதனே அவர்கள் இறந்த இடத்தில் கட்டு, அதனே வழிபடுவார்கள். இதுவே * கல்லெடுப்பு என்று இக்காலத்தில் கூறப்படு வது. இதற்குத் தினமும் பூசனே புரிதலும் உண்டு. அன்றி, ஆண்டுக்கொரு முறையேனும் பூசனே ஆற்றுதல் உண்டு. இப்பூசனேயை ஆற் றும் முறையாவது, இக்கல்லினே நீராட்டியும், நெய் விளக்கு ஏற்றியும், துரபம் காட்டியும் வழி படுவதாகும். இக்கல்லின் முன், இக்கல்லில் எழு தப்பட்டவனுக்கு விருப்பமாய் இருந்த பொருள் களே வைத்துப் படைப்பர். இக்கல்லுக்குக் காட்டப்படும் துரபத்தின் புகை மேகம் போலப் பரந்து செல்லும் என்ருல், தூபப் புகையின் மிகுதிப்பாட்டை நாம் எடுத்துக் கூற வேண்டா அன்ருே ? அப்புகை வெறும்புகையன்றி, நல்ல மணமுடைய புகையாய் இருக்கும். இன்னம் விரிவாக இந்நடுகல் விழாச் சிறப்பினை உறை யூர் இளம்பொன் வாணிகளுர் வரலாற்றிலும் கண்டுகொள்க. கற்பூர ஒளி அக்காலத்தில் காட்டப்படவில்லை என்பதை ஈண்டு நினைவுபடுத்