பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திக்கொள்க. "சலம் பூவொடு தூபம் மறந்தறி யேன் என்ற அப்பர் பெருமானுடைய அருள் வாக்கும் இதற்குச் சான்று பகரும். இவ்வாறு வீர வழிபாட்டில் தலே சிறந்த ஊர் இங்குக் குறிப் பிடப்பட்ட நெடுந்தகை ஒம்பிய ஊர் ஆதலின், இதனைப் புலவர் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனர்,

' கன்னீர் ஆட்டி கெய்க்கறைக் கொளீஇய

மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும் அருமுனை இருக்கைத்து'

என்று கூறினர். 'முனே இருக்கைத்து என் பது, முதன்மையான இருக்கையுடையது என்ப தாம்.

இத்தகைய முதன்மை மிக்க ஊரைப் பகைவர் அணுகுதல் அரிது என்பதைப் புலவர் ஒர் உவமை வாயிலாக உரைத்திருப்பது கணிமிகு சுவை தரும் பகுதியாகும். இவ்வூர் பாம்பு வாழும் புற்றுப் போன்றது என்ற உவமையால் சிறப்பிக்கப்பட் டது. "அரவு உறை புற்றத்து அற்றே என் பது இவ்வுவமையை உணர்த்தும் அடி. இந்த உவமையின் உட்பொருள் யாது? பாம்பு உறை யும் புற்றின் அருகே எவரேனும் போவரோ ? அணுகுவரோ? அணுகில்ை எனணுவர்? அழிவே உறுவர் அன்ருே? அதுபோலப் பாம்பு போன்ற நெடுந்தகையில்ை காக்கப்படும் புற்றுப்போன்ற