பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. பக்குடுக்கை நன்கணியார்

பக்குடுக்கை நன்கணியார் என்பவர் புலவரும் சிறந்த வான சாத்திரியாரும் ஆவர். இவர் புலவர் என்பதை இவர் பாடிய புறநானூற்றுப் பாடலிற்காணப்படும் செய்யுள் அறிவிக்கும். இவர் சோதிடப் புலமையுடையார் என்பதை இவர் பெயராகிய கணியார்' என்பது உணர்த் தும். கணி என்னும் சொல், சோதிடம் வல் லான் என்ற பொருளேத் தரும். அச்சோதிடக் கலையில் இவர் சிறந்திருந்தமையின், அச்சிறப் புப் பற்றிக் கணியார் என்றே வழங்கப்பட்டனர். சோதிடக் கலையில் சிறந்து விளங்கின காரணத் தால் இவர் கணியார் என்று மட்டும் வழங்கப் படாமல் நன்கணியார் என்று அடைமொழி புணர்த்தும் வழங்கப்பட்டுள்ளார்.

இவர் நன்கணியார் என்று மட்டும் குறிக்கப் பெருமல், பக்குடுக்கை என்ற அடைமொழியும் இ8ணக்கப்பட்டுப் பக்குடுக்கை நன்கணியார் என்றும் வழங்கப்பட்டு வந்துள்ளார். பக்கு என்னும் மொழிக்குப் பை என்பது பொருள். இச்சொல்லுக்கு இப்பொருள் ஐங்குறு நூறு என்னும் நூலிலும் கவித்தொகையிலும் ஆளப் பட்டுள்ளது. உடுக்கை என்பது உடையாகும். பக்கு என்பது மரப்பட்டைக்கும் பெயர். ஆகவே, நன்கணியாராகிய இப்புலவர் மரவுரியா