பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லாகிய மெய்ப்பையையே - சட்டையையேஉடையாக உடுத்து வாழ்ந்திருக்கின்ருர் என்பது புலனுகும். இதல்ை இவரது வறுமையும் வெளிப்படுகின்றது. இவர் தமக்கு நல்லுடை வேண்டும் என்ற அவா இல்லாது, தம் ஆகத்தை மறைப்பதற்கு ஏதோ ஒரு பொருள் இருத்தல் போதுமானது என்று கருதிய சீரிய கருத்தர் ஆவர். இதைக்கொண்டு இவர் உலக இன்பத் தில் மிகுந்த கருத்தைச் செலுத்தாத ஞானியார் என்றுங்கூடக் கூறலாம். இக்காலத்திலும் துறவியர் சிலர் நூலாடையேயன்றித் தோலா டையும் உடுத்தித் திரிவதைக் காணலாம்.

இப்புலவருடைய புறத் தோற்றத்தைக் கொண்டு இவர் ஞானியாராகத்தான் இருக்க வேண்டும் என்று கூறலாம். இவர் பாடியுள்ள பாடலாலும், இவர் சிறந்த ஞானியார் என்பது புலப்படுகிறது. ' அப்பாட்டு யாது? அப்பாட் டால் கருதப்படும் ஞானக்கருத்துக்கள் யாவை?” என்பனவற்றை இனிக் காண்போமாக :

பக்குடுக்கை நன்கணியார் பாடிய பாடல் ஞானக்கருத்தை நன்முறையில் அறிவித்துள் ளது. அப்பாடலே நன்கு சிந்தித்து உணர்ந்தால், உலக வாழ்வின் தன்மை இத்தகைத்து என்பது தெற்றத் தெளியப் புலகுைம். இவரது கருத்து, இவ்வுலகத்தியற்கை மிகக் கொடிது என்பது. இவர் இவ்வாறு உலக இயற்கை கொடிது என்று கூறுவதற்குக் காரணமும் காட்டுகிருர். “உலக