பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[72]

மக்களே, நான் கூறுவதை உற்றுக் கவனி யுங்கள்,' என்று இரங்து அழைத்து கல்லுரை வழங்குவது போல, இவர் உலகில் நிகழும் நிகழ்ச்சியினை எடுத்து மொழிகிருர். அந்தோ: ஒரே வீதியில் ஒரு வீட்டின் முன்னர் அவ்வீட் டிற்குரியவன் இறந்து போனமையைக் குறித் துச் சாப்பறை அறையப்படுகின்றது. மற். ருேர் இல்லத்தில் மங்கள வாத்தியமாகிய முழ வின் ஒசை அவ்வகத்தில் கடக்கும் திருமணம் காரணமாக ஒலிக்கப்படுகிறது. மற்ருெரு நிகழ்ச்சியினையும் பாருங்கள்: ஒர் இல்லத்தில் காதலனேடு கூடி மகிழ்ந்த காதலி தன் கூந்தலில் மலர் அணிந்து மனம் மிகக் களிக்கின்ருள். மற். ருேர் அகத்தில் ஒர் இளைய நங்கை தன் கணவ ளுேடு கூடி மகிழும் மகிழ்ச்சி நீடிக்கப் பெருமல், அவ்ன் இறந்தமைக்கு மிக மிக நொந்து கண்ணிர் சிந்திக் கலங்கியவளாய்க் காணப்படுகின்ருள். இவ்வாறெல்லாம் உலக மக்கள் இன்ப துன்பங் களேத் துய்க்கும் வண்ணம் அந்தப் பிரமனே படைத்துள்ளான். அவன் ஏன் இப்படிப் படைக்க வேண்டும்? அவன் நிச்சயமாகப் பண்பு இல்லாதவனே." என்று கூறி உலக இயற்கையினை விளக்குகின்ருர் இப்புலவர். உல கின் இயற்கை கொடிது என்று கூருமல் வேறு என்ன கூறுவார்? இவ்வாறு உலக இயற்கை யினை உயர்ந்த கருத்துக்கள் தோன்ற உறைப் பதிலிருந்து இவர் சிறந்த ஞானியார் என்பது ஐயம் இன்றிப் பெறப்படுகின்றதன்ருே? ஞானி