பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[73]

களுக்கன்ருே இவ்வாறு உயர்ந்த கருத்துக்களை எடுத்துக் கூறும் ஆற்றல் உள்ளது?

இவ்வாறு உலகில் ஒருபால் மகிழ்வும், மற். ருெருபால் துன்பமும் நிறைந்திருக்கும் கிலேயினை மட்டும் கூறி இப்புலவர் நிறுத்தினரல்லர். இதற்குமேல் நல்லுபதேச மொழியினையும் உரைத்துள்ளார். அதுவே திருமூலர் கருத்தாகிய "யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக,' என்னும் உயர்ந்த கருத்தை இவர் பெற்றிருந்த மையைக் காட்டுவதாகும். இவர் கூறும் அற வுரையாவது, ' நான் உலகத்தின் தன்மையினே இன்னது என்று கூறிவிட்டேன். ஆகவே, இதனை நன்கு உணர்ந்தவர் வீட்டின்பத்தைத் தரும் நல்ல செயல்களே அறிந்து ஆற்றிக்கொள் வாராக, என்பதாம். இத்துணேக் கருத்துக் ளேயும் இப்புலவர் பெருமானர் தாம் பாடிய ஒரு பாட்டில் அடக்கிப் பாடியுள்ளார். அப்பாடல் பல அடிகளையுடைய பாடலும் அன்று ; சில அடிகளைக்கொண்ட பாடலே ஆகும். அப்பாடல் முழுமையினேயும் உணர்ந்துகொள்ளுதல் பெரு நலம் பயக்கும். அப்பாடல் நாம் வீட்டின்பம் பெறுதற்கான செயல்களில் ஈடுபடத் துணே செய்ய வல்லது என்பது, நுணுகி அறிவார்க்குப் புலப்படும். அப்பாடல்,

" ஒர்இல் கெய்தல் கறங்க ஓர் இல்

ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப் புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிக்தோர் பைதல் உண்கண் பணிவார்பு உறைப்பப்