பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[74]

படைத்தோன் மன்ற அப் பண்பில் ஆளன் :

இன்னது அம்மஇவ் உலகம்! இனிய காண்க.இதன் இயல்புஉணர்ந் தோரே.”

என்பது, அதாவது, “ஒரு வீட்டில் சாப்பறை ஒலிக்க, மற்ருெரு வீட்டில் குளிர்ந்த மத்தளத் தின் இசை இசைக்க, கணவைேடு கலந்து இன் புற்றவள் மலர் அணி அணிந்து மகிழ, ஒருத்தி தன் கணவனே இழந்து வருத்தம் அடைந்து கண் ணிர் சிந்த, இவ்வாறு ஒன்றற்கு ஒன்று நேர் மரருன விதத்தில் அந்தப் பிரமன் உலக மக்க ளைப் படைத்துள்ளான். ஆகவே, அவன் உண் மையில் பண்பு இல்லாதவன் ஆவான். எனவே, இந்த உலகம் துன்பம் தருவதாகும். இனிய மோட்ச உலகம் அடைய விரும்பினேர் நல்ல செயல்களேச் செய்வாராக, என்பதாம்.

இத்தகைய அறவுரைகளே அறிவுறுத்திய பக் குடுக்கை நன்கணியார் மற்றும் பல பாடல் களேப் பாடியிருப்பாராயின், பல அரிய கருத் துக்களே நாம் அறியலாம் அன்ருே ? என் முலும், இவ்வொரு பாட்டின் உறுபொருளே யேனும் உணர்ந்து நாம் நல்வழிப்படுவோமாக.