பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[3 |

மற்ருெரு காரணமாகக் கூறப்படுவது, பின் வரும் குறிப்பாகும். சீத்தலைச் சாத்தனர் சங்க கால அறிவுடைச் சான்ருேர் அல்லரா? அவர் தமிழ்ச் சங்கத்தின் புலவர் பெருமக்களுள் தாமும் ஒருவராய் இருந்த போது, தம்மையும் புலவர் என்று ஏற்றுக்கொள்வதற்காகச் சிலர் பாடல்களேப் பாடிக் கொண்டுவந்து சங்கப் புல வர்களின் ஆமோதிப்பைப் பெறப் படித்துக் காட்டுவர். அந்தச் சமயங்களில் அப்பாடல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் முதலிய பல குற்றங்கள் மலிந்திருத்தலேக் கேட்குந்தோறும், சகிக்க இயலாத காரணத்தால், தாம் எழுதும் இரும்பு ஆணியாகிய எழுத்தாணிகொண்டு இத் தகைய தவறுடைய பாடல்களேயும் நாம் கேட்க நேர்ந்ததே ! என்று தம் தலையில் குத்திக் கொள்வாராம். இவ்வாறு குத்திக்கொண்டு வந்த காரணத்தால், குத்துண்ட இடம் புண்ணு கிச் சீயொழுகும் தலேயுடைமைபற்றி, சீத்தலைச் சாத்தனர் என்று வழங்கப்பட்டனர்,

'இது புலவருக்கு நின்றபாடு இல்லையோ ?” என்று நீங்கள் வினவவும் கூடும் அல்லவா ? இவர்க்கு இவ்வாறு தம் தலையில் குத்திப் புண் னக்கிக்கொண்ட செயல் முற்றுப்பெறும் கால மும் வந்து சேர்ந்தது. வள்ளுவப் பெருந்தகை யார் வரைந்த வாய் மொழியாகிய திருக்குறட் பாக்களைக் கேட்ட பின்னர் அக்குறட்பொருட் செறிவு இவர் குத்திப் புண்ணுக்கிக்கொள்வதை நிறுத்தச் செய்தது. இதனை அழகுபட இவர்