பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நெடும்பல்லியத்தனுர்

பல்லியத்தனர் என்பவர் பண்டைக்காலத்துச் செந்தமிழ்ப் புலவருள் ஒருவர். இவரது இயற் பெயர் யாது என்பதை நாம் அறிதற்கு இல்லை. இயம் என்னும் சொல், வாத்தியம் என்னும் பொருள் தருதலின், இவர்பல வாத்தியங்களேத் தம்மிடத்தில் கொண்டிருந்த காரணத்தால் பல்லி யத்தனர் என்று வழங்கப்பட்டிருக்கின்றனர். இவர்பால் பல வாத்தியங்கள் இருந்தன என்று கருதுவோமானல், இவர் அவ்வாத்தியங்களே இயக்க வல்ல ஆற்றல் படைத்தவராயும் இருக்க வேண்டும் அல்லது அவ்வாத்தியங்களே வேண் டுவார்க்கு விலைப்படுத்தி வந்தவராய் இருக்க வேண்டும். இவ்விரண்டு காரண்ங்களாலும் இவர் வாத்தியங்களால் வாழ்வு நடத்தியவர் என்பதை ஒருவாறு துணிந்து உரைக்கலாம். இவரது உடல் வளர்ச்சி நீண்டிருந்தமையின், நெடும்பல்லியத் , தனர் என்று வழங்கப்பட்டார் என்பதையும் நினைவில் கொள்வோமாக. இவ்வாறு வாத்தி யங் காரணமாகப் பெயரைப்பெற்ற இவர், புல வராகவும் இருந்திருக்கின்ருர். இவர் பாடியுள்ள ஒரு பாடல் புறநானூற்றில் காணப்படுகிறது. அப்பாடல் பாண்டியன் பல்யாக சாலை முதுகுடு மிப்பெருவழுதியின் சிறப்பைக் குறிப்பிடும் முறையில் விறலியாற்றுப்படை என்னும் துறை