பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யில் அமைந்ததாகும். ஆற்றுப்படை என்பது, பரிசில் பெற்ற ஒருவன், பரிசில் பெற விரும்பிய மற்ருெருவனுக்குத் தான் யாரிடமிருந்து பரிசில் பெற்று வந்தானே, அவருடைய அருமை பெரு மைகளேக் கூறிக் கொடைச் சிறப்பையும் எடுத் துப் பேசி, 'இவ்வழியே சென்ருல் அவ்வள்ள லேக் காணலாம்” என்று ஆற்றுப்படுத்துவ தாம் : அதாவது. வழிப்படுத்துவதாம். விறலி யாற்றுப்படை என்பது அரசனுடைய கீர்த்தி யைப்பாடும் பாடினியை வழிப்படுத்துவதாகும்.

நெடும்பல்லியத்தனர் விறலியைப் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியின்பால் ஆற். றுப்படுத்தியுள்ளார். இப்பாண்டியன் இப்புலவ ரால் மட்டும் பாடப்பட்ட பெருமை சான்றவன் அல்லன். இவனேக் காரிகிழார், நெட்டிமையார் ஆகிய இரு பெரும்புலவரும் பாடிச் சிறப்பித் துள்ளனர். இவ்வாறு இவன் புலவர் பலரால் பாடப்படும் பெருமை பெற்றவன் என்ருல், இவன்பால் பல அரிய குணங்கள் இருக்கவேண் டும் அல்லவா? அத்தகைய பெருமைகள் என்ன என்பதையும் நாம் இங்கு ஆராய்தல் இன்றி யமையாததாகும்.

இப்பாண்டியன் தெய்வபத்தியுடையவன் : சிவபெருமானிடத்தில் நிரம்பிய அன்புடைய வன். “இவனது சென்னி முக்கட்பரமன் திருக் கோயில் வலம் வரும் காலத்துத் தாழ்வதாக, " என்று புலவர் காரிகிழார் கூறுவதிலிருந்து,