பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவன் பிறர் இடத்து எங்கும் தன் தலையினைத் தாழச் செய்யாதவன் என்பது தெரிகிறது. இவன் ஈகையிலும் சிறந்தவன். புலவர் இவனைத் ‘' தண்டா ஈகைத் தகைமாண் குடுமி என்றும் கூறியுள்ளார். அதாவது, ' குறையாத கொடைக் குணம் வாய்ந்த தகுதியும் மாட்சிமையுமுடைய முதுகுடுமிப் பெருவழுதி' என்பதாம். இப் பாண்டியன் தன்னைப் பாடி வரும் பாணர்கட்குப் பொற்ருமரை மலரை ஈபவன் ; பகைவர்க்கு இன்னுதவற்றைச் செய்து, பரிசிலருக்கு இனிய வற்றைச் செய்பவன் ஆவன். இப்பல்யாகசாலை முதுகுடுமி பகைவர் தேயத்தைப் பாழ்படுத்திய செய்தி மிகவும் பரிபவப்படத்தக்க செய்தி யாகும். இவன் பகைவருடைய அரண்களேக் கழுதை ஏர் பூட்டி உழுதனன். அவர்களது தேயத்தின்கண் விளைநிலங்களில் குதிரை பூட் டப்பட்ட தேரை ஒட்டிப் பாழ்படுத்தினன் பகை வர் குளித்து இன்புறும் குளங்களின் நீர் பாழா கும்படி யானைகளைப் படியச் செய்தனன். இப் பாண்டியன் பல யாகங்களேயும் செய்தவன்; இதனாலேதான் பல்யாகசாலை முதுகுடுமிப் பெரு வழுதி என்று கூறப்பட்டனன்.

இன்னுேரன்ன சிறப்புடையவனே நெடும்பல்லி யத்தனர் எவ்வாறு சிறப்பித்துள்ளார் என்பதை இனிக் காண்போமாக. இவர் இப்பாண்டியனேக் கண்டுவரச் செல்கிருர். இப்பாண்டியன் போர்க் கோலம் பூண்டு பகைவர் தேயத்தில் பாசறை அமைத்து அங்குத் தங்கியிருக்கின்ருன். அவ்