பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடத்திற்கு விறலியையும் தம்முடன் வருமாறு: அழைக்கின்ருர் புலவர். அப்படி அழைக்கின்ற போது,

' கல்யாழ் ஆகுளி பதலையொடு சுருங்கிச்

செல்லா மோதில் சில்வளை விறலி !”

என்று கூறி அழைக்கின்ருர். இதன் பொருள், ' நல்ல யாழையும் சிறு பறையையும் ஒரு தலே. மாக்கினேயையும் கட்டிக்கொண்டு போவோம். அல்லோமோ ? சொல்வாயாக, என்பது. இவ், வாறு கூறியதன் குறிப்புப் " பாண்டியனேக் கண்டு பரிசில் பெற்று வரலாம். வருக, என்ப தாம். இதல்ை, இப்பாண்டியன் தன் காட்ட கத்து இருந்தபோதும், தன்னை அடைந்து கேட் பவர்க்கு இல்லை என்னது ஈந்து வந்த வள்ளல் என்பதைப் புலவர் அழகுற அறிவித்துள்ளார். பரிசில் பெறப் போதில் வேண்டும் என்னும் குறிப்புடன், நெடும்பல்லியத்தனர் விறலியை அழைத்தார் என்றே இவ்வடியினே மேற்கோ ளாகத் தொல்காப்பியப் பொருளதிகார உரை யாசிரியர் நச்சினர்க்கினியரும் குறிப்பிட்டுள்ளார். நெடும்பல்லியத்தனர் தாம் பல வாத்தியங்களே வைத்து அனுபவம் பெற்றவர் என்பதற்கு அறி குறியாக இவரது பாடலாகிய இப்பாடலில், யாழ், பறை, மாக்கிணே ஆகிய வாத்தியங்கள் எடுத் துக் கூறியிருப்பதைக் கண்டுகொள்ளலாம். இவ் வாத்தியங்களே நன்முறையில் இயக்க வல்லவர் விறலியராகிய பாடினிமார் என்பதையும் நாம் உணரலாம்.