பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7ग्न !

இப்புலவர் பெருமானர் பாடலால் பல்யாக சாலே முதுகுடுமிப் பெருவழுதி சோம்பி வாளா தன் அரண்மனையிலே இருந்துவிடாமல், போர் என்ன வீங்கும் பொலங்கொள் தோளினய்ை, பகைவர் தேயத்தில் சென்று போர்புரியும் வேட் கையினய்ை ஆண்டே பாசறையின்கண் விளங் குபவய்ை இருந்தான் என்பன போன்ற குறிப் புக்கள் அறியக் கிடக்கின்றன. இவன் இவ்வாறு பகைவர் புலத்தில் இருந்த நிலையினைப் புலவர் எவ்வளவு குதுகலமாகக் கூறுகின்ருர் பாருங் கள் !

'பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின்

குடுமிக் கோமான் ”

என்பதே அவ்வடிகள்.

இப்பாண்டியன் இருந்த பாசறை பரந்த பாசறை. " கண் அகல் பறந்தலே ' என்று அன்ருே புலவர் குறிப்பிடுகிருர் ? இவ்வாறெல் லாம் இவ்வரசன் இருந்த இடத்தைக் கூறி விற லியை அழைத்த போது, அவள் இவருடன் போகாமலா இருந்திருப்பாள்? கட்டாயம் போயிருப்பாள் : பரிசிலும் பெற்று மீண்டிருப் பாள்.