பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. மதுரை ஒலக்கடைக் கண்ணம்புகுந்தாராயத்தனுர்

மதுரையின் சிறப்புக் குறித்து முன்னர்ப் படித் தோம் அல்லவா ? அதுதான் மதுரைக்குரிய சிறப்பு என்று சொல்ல முடியாது. மதுரையின் மாண்பு சொல்லச் சொல்ல மாளாதது. மதுரை யைப் பற்றிப் பரிபாடல் நூலில் காணப்பட்ட சில செய்யுள்களின் துணைகொண்டு முன்னர் மதுரையின் பெருமையினே உணர்ந்தனம். அதே பரிபாடலில் மதுரையைப்பற்றிக் கூறும் ஒரு பாடற்கருத்து, மேலும் மதுரையின் மாட்சிமை யினை மட்டின்றி விளக்கி நிற்கின்றது. அப்பாட் டின்பொருளே நாம் அறிந்த பின்பே 'மதுரைமா நகரம் இவ்வளவு சிறப்புடையதா! என்று வியந்து பாராட்டுவோம். அப்பாட்டின் திரண்ட பொருள் பின் வருவதாகும்.

மதுரைமா நகரம் திருமாலின் உந்தியங்கம லத்திலிருந்து தோன்றிய தாமரை மலர்க்கு ஒப் யானது. உந்தியந்தாமரைக்குப் பல இதழ்கள் இருப்பது போல, மதுரையாகிய கமலத்திற்கு இதழ்கள் போலப் பல தெருக்கள் நிறைந்துள் ளன. பங்கய மலரின் இடையே ஒரு கொட்டை இருப்பது போல, மதுரையாகிய வனசத்தின் இடையே, மதிமுடிச் சொக்கன் கோயில் தாம