பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 81 ) - ரைப் பொகுட்டென விளங்கிக்கொண்டிருக் கிறது.

தாமரையில் எவ்வாறு மகரந்தப் பொடிகள் நிரம்பக் காணப்படுமோ, அவ்வாறே மதுரை யாகிய தாமரை மலரில் குடிமக்களாகிய மகரங் தப் பொடிகள் நிறைந்திருந்தன. தாமரையில் உள்ள மகரந்தத்தில் தேன் நிரம்பி இருக்க, அதனே வண்டுகள் பருகி இன்பமுறுவது போல, மதுரையாகிய தாமரையில் மகரந்தப் பொடி போல வாழும் குடிமக்களிடம் பரிசிலாகிய தேனைப்பருகப் பரிசிலர்களாகிய வண்டுகள் சூழ்ந்திருந்தன.

இந்த அளவிற்கூட மதுரையின் மாண்பினே மொழிந்து பரிபாடல் நிறுத்தவில்லே. சேர சோழ நாடுகளேவிட, இப்பாண்டி மாநகர் சிறந் தது என்பதை வெகு சாதுரியமாக ஒரு பாடல் உணர்த்தி இருப்பது படித்துச் சுவைத்தற்குரிய பகுதியாகும். சேர நாட்டிலும், சோழ நாட்டி லும் பொழுது புலர் காலேயைப் புலப்படுத்தக் கோழிகள் கூவும். அக்கோழியின் குரலேக் கேட்டுச் சேர சோழ நாட்டினர் எழுந்து தம் பணியில் ஈடுபடுவர். ஆனால், பாண்டி நாட்டில் பொழுது புலர் காலேயினேப் பாண்டி நாட்டு மக்கள் கோழி கூவுவதிலிருந்து அறிந்துகொள்வ தில்லை. வேதவேதியர் வேதங்களேக் காலேயில் ஒத, அவ்வேத ஓசையைக் கேட்டு மதுரைமா ககர மக்கள், "ஓ! பொழுது புலர்த்துவிட்டது.

6