பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைந்த அடைமொழிகளை நாம் நீக்கி, இவரது பெயரைக் குறிப்போமால்ை, கண்ணம்புகுந்தா ராயத்தனர் என்பது பெறப்படும். இப்பெயர் இவர்க்கு எக்காரணம் பற்றி வந்தது என்பதை அறிதற்கு இயலவில்லே. என்ருலும், கண்களி லிருந்து நீரைச் சிந்தும் மாலே அணிந்த ஆயத்த ர்ை என்று காரணம் கற்பிக்கினும் ஒருவாறு கற்பிக்கலாம். இதல்ை இவர் அன்புள்ளம் மிகுதியும் உடையவர் என்று யூகிக்கலாம். அன் புடையவர்களின் கண்கள் நீரைச் சிந்தி அன் புடைமையை வெளிப்படுத்திவிடும். இந்த உண்மையை நமக்கு வள்ளுவனரே நன்கு எடுத்து மொழிந்துள்ளார். -

  • அன்பிற்கும் உண்டோ அடைக்குங்தாழ்! ஆர்வலர்

புன்கண்ர்ே பூசல் தரும்.’

என்ற குறட்பாவே இதற்கு உரிய எடுத்துக் காட்டாகும். இதன் பொருள், 'அன்பிற்குத் தாழ்ப்பாள் இல்லை. அவ்வன்பு வெளிப்படா திருக்க அதனே அடைத்து வைத்தற்கும் இய லாது. அன்புடையார் கண்களே, நீரைச் சிந்தி அவர்கள் அன்புடையவர்கள் என்பதை ஆரவாரத் துடன் வெளிப்படுத்திவிடும், என்பதாம். இப் பண்புக்கு இப்புலவர் எடுத்துக்காட்டாய் இருந்த மையின், இவர் கண் அம்பு உகும் தார் ஆயத்த ர்ை என்று குறிப்பிடப்பட்டார் என்று ஒருவாறு கூறிவிடலாம். அம்பாவது நீர் : உகும் என்பது சிந்தும் என்னும் பொருளது. தார், மாலேயாகும்.