பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாலே அணிதல் எவர்க்கும் உரியது. "தார் மார்ப' என்று அடிக்கடி தமிழ் இலக்கியங் களிலே கூறப்படும்.

இனி இவ்வணிகர் புலவர் வரிசையில் வைத் துப் போற்றப்பட்ட பெருமை சான்றவர் என் பதையும் உணர்வோமாக. இவர் புலவர் என்ப தற்குக் காரணம் இவர் பாடியுள்ள பாடல் ஒன்று புறநானூற்றில் காணப்படுவது. அப்பாடல் ஒன்றே இவர் புலமை மிக்க சான்ருேர் என்ப தைப் புலப்படுத்தி நிற்கிறது. அப்பாடல் புறப்பொருளின் பல துறைகளில் ஒன்ருன மகட்பாற்காஞ்சி என்னும் துறையைப்பற்றிய தாகும். மகட்பாற்காஞ்சியாவது, “உன் மகளே எனக்கு மணமுடித்துத் தருக, என்று கேட் டேர்னுக்கு இண்ங்காமல், அவன் வேண்டுகோளே யும் மறுத்து உரைப்பதாகும்.

மதுரை ஒலைக்கடைக் கண்ணம் புகுந்தா ராயத்தனர்பாட்டில், "மகளேக் கேட்ட்வர் யார்: அப்படிக் கேட்டவர்க்கு மாறுபட்டுக் கூறி. யவர் யாவர்?’ என்பன போன்ற கருத்துக் கள் வெளிப்படையாகத் தெரிந்துகொள்ளு தற்கு இல்லே. இவரது பாடலில் ஊரைப் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. அது மிகப் பழைய ஊர் என்பதை அவ்வூர் அமைப் புக்களுள் சிலவற்றை இப் புலவர் கூறி யிருப்பதால் அறிந்துகொள்ளலாம். அவ்வூர் பழைய ஊர் என்பதைச் செய்யுளில் மூதூர்