பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[4]

காலத்துப் பெரும்புலவருள் ஒருவரான உறை யூர் மருத்துவன் தாமோதரனர் தமது அருமைப் பாடல் ஒன்றில் வள்ளுவர் முப்பாலால் தலைக்குத் துத்தீர்வு சாத்தற்கு, என்று விளக்கமாகக் குறிப் பிட்டுள்ளார். இதன் விளக்கத்தினை இன்னமும் தெளிவுற இந்நூலிலேயே உறையூர் மருத்துவன் தாமோதரனர் என்னும் தலைப்பின்கீழ் எழுதப் பட்ட இடத்தில் கண்டு உணர்வீர்களாக,

மேலே காட்டிய காரணங்களால் இப்புலவர் பெருந்தகையார் மதுரைக் கூலவாணிகன் சீத்த அலச் சாத்தனர் என்று குறிக்கப்பட்டு வந்துள் ளார் என்பதை உணர்க. இவர் மதுரைச் சீத் தலைச் சாத்தனர் எனவும், சீத்தலைச் சாத்தனர் எனவும், சாத்தனர் எனவும் வழங்கப்பட் டுள்ளார்.

இப்புலவர் பெருமார்ை இவரை ஒத்த புலவர் களால் சிறப்பிக்கப்பட்ட சீர்மையோர் ஆவார். இவரோடு நட்புக்கொண்டிருந்த புலவர். சிலப் பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகளார் ஆவார். அவர் இவரைக் குறிப்பிடும் போதெல்லாம். * நன்னூற் புலவன்’ என்றும், 'தண்டமிழ் ஆசான் சாத்தன் என்றும், தண்டமிழ்ச் சாத்தன் என் றும் குறிப்பிட்டு, இவர்க்கு இருந்த தண்டமிழ் அறிவையும், நல்ல நூல்களே இயற்றும் வன்மை யினையும், இவர் ஆசிரியர் என்று போற்றத்தக்க பெருமை சான்றவர் என்பதையும் நன்கனம் புலப்படுத்தியுள்ளார்.