பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ற சொல்லே காட்டி நிற்கும். அம்மூதூரில் இருந்த அகழி, நீர் இன்றி வற்றி ஆழமும் இன் றித் தூர்ந்து இருந்ததாம். அவ்வூர் அகழியைச் சுற்றியிருந்த மதிற்கவர்களும் சிதைந்து கிடந் தனவாம். அவ்வாறு சிதைந்து காணப்பட்ட மதில்களில் அமைந்த மதில் உறுப்புக்களுள் ஞாயில்கள் என்பன பயன்படுதல் இன்றிக் கிடந்தனவாம். ஞாயிலாவது வீரர்கள் மதிலுக்கு உள்ளிருந்து பகைவர்கள் தாம் எவ்விடம் இருந்து அம்பைச் செலுத்துகின்றனர் என்பதையறியா திருக்கும் முறையில் அம்பைச் செலுத்த மதிலில் அமைக்கப்பட்ட சிறு சிறு துவாரமுடைய அறை யாகும். இதனையே ஏ அறை என்றும் கூறு வர். அதாவது, அம்பு எய்யும் அறை என்பதாம்.

" தூர்ந்த கிடங்கில் சோர்ந்த ஞாயில்

சிதைந்த இஞ்சிக் கதுவாய் மூதூர்'

என்பன அம்மூதூர் வர்ணனையினைக் காட்டும் அடிகள்.