பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. ஆலியார்

ஆலி என்பது ஒர் ஊர். இவ்வூர் சோழகாட் டின் உள் நாடுகளுள் ஒன்ருன ஆலி காட்டின் தலைநகர் : அக்காரணம் பற்றியே இது 'ஆலி' என்று கூறப்பட்டது போலும் ! இது திருவாலி என்றும் வழங்கப்படும். இத்தலம் திருமங்கை யாழ்வார் பிறந்த இடமும் ஆகும். இங்குள்ள திரு மாலின் திருப்பெயர் வயலாலி மணவாளன் என் புது. தேவியார் திருப்பெயர் அமிருத கடவல்லி என்பது. இத்தலத்துப் பெருமாள் மேற்கு நோக்கிய திருமுகமுட்ையவராய், வீற்றிருக்கும் கோலத்துடன் அன்பர்களுக்குக் காட்சி அளிக் கின்ருர். இத்தலத்தில் திருமங்கையாழ்வார் பிறந்தவர் என்ருல், இத்தலத்துப் பெருமாள் மீது பாடல் பல பாடாமல் இருப்பாரோ? ஆகவே, இத்தலம் திருமங்கை ஆழ்வாரால் பாடப்பட்ட திருத்தலமாகும். இத்தலத்தில் திரு மகளாகிய அமிருத கடவல்லி திருமாலாகிய வயலாலி மணவாளனக் கட்டித் தழுவிக் கொண்ட காரணத்தால் இத்தலம் திருவாலித் திருநகர் என்ற திருப்பெயரைப் பெற்றது. இத் தலம் சீர்காழிப்பதிக்குக் கிழக்கே ஆறு கல் தொலைவில் உள்ளது.

இத்தகைய சிறப்புடைய திருவாலித் திருகக ரில் இப்புலவர் பெருமானர் பிறந்து வாழ்ந்த கார