பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ணம் பற்றியே இவரும் தொழிலோடு புலமை யும் மேற்கொண்ட புலவர் வரிசையில் வைத்துக் கூறப்பட்டார் என்க. -

ஆலியார் பாடியுள்ள பாடல், வீரன் ஒருவன் கூறிய மொழிகள் போல அமைந்துள்ளது. அவ் வீரன் மொழிந்த மொழிகளாக அப்பாடல் அமைந்திருப்பதால் இவர் அவ்வீரர் பண்பு அமைந்திருந்த பெருவீரர் என்பது தெள்ளத் தெளிந்த உண்மையன்ருே?

ஆலியார் தம் பாட்டில் வேந்து என்று பொதுப் ப்ட்க் குறித்திருப்பதால், இவர் குறிப்பிடும்

வேந்து யாவன் என்பதை உணர்தற்கு இல்லே. இவர் குறிப்பிடும் வேந்தன் இயல்பினை இப்புல

வர் நன்கு எடுத்து இயம்பியுள்ளார். சில சொற்

களால் அவ்வேந்தனைப் பற்றி இவர் குறிப்பிட்

டாலும், அச்சில சொற்களில் பல கருத்துக்கள்

நிரம் பியு ள்ளன. அவ்வேந்தன் தன்னிடம். இருந்த படை வீரர்களைத் தன் கண்ணினும் அருமையாகக் கருதி வந்தான் என்று நாம் அறிந்துகொள்ளலாம். தான் உண்டு களித்தலே விரும்பாமல், தனக்கு முன்னர்த் தன் படை வீரர் உண்டு களித்தலேயே விரும்பியவன் என்பது பெறப்படுகிறது. 'தனக்கு விஞ்சியது தருமம்,” என்னும் பழமொழிக்கு விலக்காக இவ்வேந்தன் வாழ்ந்தவன் ஆவன். இவன் ஈத்து உவக்கும் இன்பத்தை நன்கு உணர்ந்தவன். நன்கு கலக் கிய மதுவை வீரர்க்கு ஈந்து, தான் மேலே நீராய்