பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்த மதுவை உண்டான் என்ருலும், போருக்கு மட்டும் தான் முந்திப் போகும் எண்ணமுடைய வய்ை இருந்தவன். ' பந்திக்கு முந்திக்கொள்: படைக்குப் பிந்திக்கொள், என்னும் இக்காலத் துப் பழமொழிக்குச் சிறிதும் இடங்கொடாத வன். இவன், போருக்குப் புறப்படும் போது, இதழைக் கவ்வி வீர முழக்கம் செய்துகொண்டு செல்பவன். அப்படிச் செல்லும்போது, பகை வருடைய மதிலேச் சூழ்ந்து, 'நீ முற்படுக, என்று வேற்று வீரனுக்குக் கட்டளையிடாமல், தானே போர் முனையில் முந்தி நிற்பவன். இங்ங். னம் இவன் போரில் முனைந்து நின்ற முறைமை u8&T ஆலியார்,

" நேரார் ஆர்எயில் முற்றி

வாய்மடித்து உரறிரீ முந்துஎன் ஞனே.”

என்று கூறியுள்ளார். இதன் பொருள், பகைவ ருடைய அரிய மதிலேச் சூழ்ந்து, இதழைக்கவ்வி, முழங்கிக்கொண்டு நீ முற்படுக, என்று கூருத வகிைத் தான் போர் முனையில் எதிரிகளின் முன் நிற்பவன்," என்பதாம்.

இவ்வாறு அழகிய முறையில் உள்ளனவற்றை உள்ளவாறு கூறிப் படிப்பவரைக் களிக்கச் செய்யும் பாடல்கள் பல, நம் பண்டைய தமிழ் நூல்களில் மலிந்து காணப்படுகின்றன. நம் பழங்காலத் தமிழ்ப் பெருமக்கள் தாங்கள் பல் வேறு தொழில் க ளில் ஈடுபட்டிருந்தாலும், தொழிலே கருத்தாகவும் பொருள் தேடலே