பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. காவற்பெண்டு

சங்ககாலம் ஒரு பொற்காலம். அக்காலத்துப் புலவர் பெருமக்கள் பாடியுள்ள பாடல்களாலே யே இன்று நாம் தமிழர் என்ற பெருமையுடன் தலைநிமிர்ந்து நிற்கின்ருேம்; நமது பண்டைய பெருமையினை உணர்கின்ருேம் ; நாகரிகத்தில் கனி சிறந்தவர்கள் என்ற பெருமிதத்துடன் துலங்குகின்ருேம் ; பிற நாட்டவர்களும் நமது தொன்மையினையும் மேன்மையினையும் போற் றிப் புகழ்கின்ற நிலையைப் பெற்றுள்ளோம். இவை உண்மை ; வெறும்புகழ்ச்சியல்ல.

இங்ங்ணம் பெருமை தரத்தக்க நிலையில் இருந் தவர்கள் ஆண்பாற்புலவர்கள் மட்டும் அல்லர் ; பெண்பாற்புலவரும் ஆவர். சங்க காலத்தில் திகழ்ந்த பெண்பாற்புலவர் பலர். அவர்களே காக்கைபாடினியார் நச்செள்ளையார், குறமகள் இளவெயினி, பாரி மகளிர், பெருங்கோழி நாய், கன் மகளார் நக்கண்ணேயார், பேய் மகள் இள வெயினி, மால்பித்தியார், மாருேக்கத்து நப்ப சலேயார், வெண்ணிக்குயத்தியார், வெறி பாடிய காமக்கிழத்தியார், பொன் முடியார் உள்ளிட்ட வர்கள். இவர்களுள் ஒருவரே காவற்பெண்டு என்னும் பெயருள்ள பெண்பாற்புலவர்.

இவ்வம்மையார் தம் இயல்புக்கு ஏற்ற