பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[92 |

தொழிலை மேற்கொண்டே புலவர் மணி யாயும் திகழ்ந்தவர். இவர் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துவரும் அரிய பொறுப்பு வாய்ந்த பணியினை மேற்கொண்டு விளங்கியவர். இதனை இவர்க்கு அமைந்துள்ள பெயர்கொண்டே உணர்ந்துகொள்ளலாம். இவ் வம்மையார் பெயர் காவற்பெண்டு என்பதே. இவ்வம்மையார்க்கு இவர் பெற்ருேர் எப் பெயர் இட்டு வழங்கினர் என்பதை நாம் அறி தற்கு இல்லே, காவல் என்பது ஈண்டு வீடு காவலோ, நாடு காவலோ, வாயிற்காவலோ அன்று குழந்தையைக் காத்து வந்த காவல் ஆகும். இக்காவலே இப்பெண்மகளார் புரிந்து வந்தமையின் காவற்பெண்டு எனப்பட்டார். புெண்டு என்னும் சொல் பெண் என்னும் ப்ொருள்து.

குழந்தைகளைப் பெறுபவர் பெண்டிர். இவர் ಹ್ರಸ್ಥಿ। ற்ருயர் என்பர். இவர்கள் பிள்ளையைப் பெறுதல் மட்டும் அன்றி, அப்பிள்ளைகளைப் பாதுகாக்கும் கடமையையும் உடையவர்கள். இதனைச் சங்ககாலப் பெண்பாற்புலவராகிய ப்ொன் முடியார் என்பவர், 'ஈன்று புறந்தருதல் என்றலேக்கடனே, என்று கூறுதலாலும், 'ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளான் ' என்ற அகநானூற்றடியாலும் தெரிந்துகொள்ளலாம். செல்வக் குடியில்-அரசர் குடியில்-பிறக்கும் பிள்ளைக்ளேக் காக்க வேண்டிய பொறுப்பினை ந ற்ருய் மேற்கொள்ளாது பிள்ளைகளைக் காத்