பக்கம்:தொழிலும் புலமையும்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[93 j

தற்கென ஒரு பெண்டிரை அமைப்பர். அத் தகைய பெண்டிர் செவிலித்தாயர் என்ற சிறப்புப் பெயருக்கும் உரியவர். பெற்ற தாயினும் இச்செவிலித்தாயர் குழந்தையை கன்கு கவனித்துக்கொள்வர். குழந்தையை உண்ண வைப்பதும் உறங்க வைப்பதும் இச் செவிலித்தாயரின் பொறுப்பே ஆகும். குழங் தைக்கு நோய் முதலிய துன்பம் வரினும், பெரி தும் துயருறுபவள் செவிலித்தாயே. இத்தகைய அரும்பெரும்பணியைப் பெற்றுத் திகழ்ந்தவர் காவற் பெண் டா கிய இப்பெண்பாற்புலவர் என்க.

இனிக் காவற்பெண்டாம் இப்பெண்பாற் புலவர், எதல்ை புலவர் வரிசையில் வைத்து மதிக்கத் தக்கவர் என்பதையும், எங்கு யாருக் குக் காவற்பெண்டாய் இருந்தவர் என்பதையும் அறிய வேண்டுவது நமது கடமையாகும்.

, இவ்வம்மையார் சோழன் போரவைக் கோப் பெருநற்கிள்ளியை வளர்த்த செவிலித்தாயர் ஆவர். அதாவது, காவற்பெண்டிர் ஆவர். இவ் வம்மையார் இச்சோழ மரபுப் பிள்ளைய்ை அன் புடன் காவல் புரிந்துவந்த காரணத்தால், காதற் பெண் டிர் என்றும் வழங்கப்பட்டவரானர். இக்காதல், தாய்மைக்காதல். மக்களிடத்தில் குழந்தைகளிடத்தில் காதல் காட்டுதலைத் "கடந் துள்ளோர்களும் கடப்பரோ மக்கள்மேல் காதல்" என நைடதத்தில் வரும் அடியால் அறிக.