பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

தொழில்துறை பற்றி

ஏழாவதாக, இண்டகிரேட்டடு வாட்டர் புரூப்பிங் லிமிடெட் 4.62 கோடி ரூபாய் செலவில் அலமாதி கிராமத்தில் செங்கை அண்ணா மாவட்டத்தில் கூட்டுத் துறையில் தொடங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் எல்லாம் ஆரம்பமாகிவிட்டன. இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுவிட்டன. விரைவிலே அந்தத் தொழிற்சாலை இயங்கத் தொடங்கும்.

எட்டாவதாக, நார்த் ஆர்க்காட் லெதர்ஸ் லிமிடெட், ரூபாய் 1.60 கோடி செலவில் கலனிப்பாக்கத்தில், வாணியம் பாடிக்கு அருகே இந்தத் தோல் பதனிடும் தொழிற்சாலை தொடங்கப்பட இருக்கிறது. கட்டுமானப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. இதுவும் ஒரு கூட்டுத்துறை நிறுவனம் ஆகும்.

அடுத்து, பணிகள் தொடர்ந்து நடைபெறும், இன்னும் முடி வடையாத நிலையிலே இருக்கிற தொழிற்சாலைகள் என்று எடுத்துக் கொண்டால் 9-ஆவதாக “டைனா லேம்ப்ஸ் அன்ட் கிளாஸ் ஒர்க்ஸ்” என்பது கும்மிடிப்பூண்டிக்கு அருகே ரூ. 42.70 கோடி செலவில் கூட்டுத் துறையில் டிட்கோவும், டைனாவிஷனும் சேர்ந்து தொடங்கும் தொழிற்சாலை ஆகும். இங்கே மின் விளக்குக்குத் தேவையான உபகரணங்கள் தயாரிக்கிறார்கள். இதற்கு ஐ.டி.பி.ஐ. கடன் வழங்கவும் அனுமதி தரப்பட்டு விட்டது. விரைவில் இந்தப் பணிகள் தொடங்க இருக்கின்றன.

10-ஆவதாக ரிலையன்ஸ் செராமிக்ஸ், மதுராந்தகத்தில் ரூ. 20.40 கோடி செலவில் கூட்டுத்துறையில் டிட்கோ, லைட் ரூஃபிங்ஸ், ரிலையன்ஸ் செராமிக் நிறுவனங்கள் ஆகியவை இணைந்து மெருகூட்டப்பட்ட தரை மற்றும் சுவர் ஒடுகள் தயாரிக்கின்ற தொழிற்சாலை. ஐ.டி.பி.ஐ. கடன் இதற்குக் கிடைத் திருக்கிறது. இந்த ஆண்டு அது தன்னுடைய உற்பத்தியைத் தொடங்க இருக்கிறது.

11-ஆவதாக உஷ்டாதே பயோடெக்ஸ் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் கடலூரில் ரூ. 20 கோடி மூலதனத்தில் செயற்கை இனிப்பு தயாரிக்கின்ற தொழிற்சாலை கூட்டுத் துறையில் டிட்கோ நிறுவனமும் கல்கத்தாவைச் சேர்ந்த உஷ்டாதே என்று நிறுவனமும் சேர்ந்து நடத்தும் தொழிற்சாலைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. அண்மையில்தான் நான் அடிக்கல் நாட்டு விழாவிற்குச் சென்று இருந்தேன்.