பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

தொழில்துறை பற்றி

மத்திய அரசின் நிறுவனமான இந்தியன் ரேர் எர்த்-உடன் இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

17-ஆவதாக டிடானியம்-டை-ஆக்ஸைடு என்ற தொழிற் சாலை, ரூபாய் 140 கோடி செலவில், கூட்டுத் துறையில், அதே குதிரைமொழித்தேரியில் தொடங்கப்பட இருக்கிறது.

ஆக, 15 மாத காலத்தில் 15 தொழிற்சாலை வந்ததா என்ற கேள்விக்கு, அறிவித்து, நடைமுறையிலே இல்லாத தொழிற் சாலைகளையும், அறிவித்து உடனடியாகத் தொடங்கிய தொழிற் சாலைகளையும், இந்த ஆண்டு உற்பத்தி தொடங்குகிற தொழிற் சாலைகளையும், உற்பத்தி அடுத்த ஆண்டு தொடங்குவதாக இருந்தாலும் இந்த ஆண்டு கட்டுமானப் பணிகள், இயந்திரங்கள் இறக்குமதி செய்கிற பணிகள் இவைகள் எல்லாம் முடிவுறுகின்ற பணிகளுமாக 17 தொழிற்சாலைகளுக்கான பட்டியலைத்தான் இந்த மாமன்றத்திலே உங்கள் முன்னால் நான் வைத்திருக்கிறேன்.

அடுத்து, இங்கே பேசிய மாண்புமிகு உறுப்பினர் மணி அவர்களும், மற்றவர்களும் மத்திய அரசு சார்பிலே அதனுடைய அனுமதியைப் பெற்றும், மத்திய அரசு முதலீடு செய்கின்ற வகையிலும் பல தொழிற்சாலைகளை நாம் தமிழகத்திற்குப் பெற்றாக வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திப் பேசியிருக் கிறார்கள். மத்திய அரசு முதலீடு செய்கின்ற பல தொழிற்சாலைகள் தமிழகத்திற்குப் பெற்றாகவேண்டுமென்ற கருத்தை வலியுறுத்திப் பேசியிருக்கிறார்கள், அதிலும் இந்த அரசு மெத்தனமாக இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய காங்கிரஸ் கட்சியினுடைய துணைத்தலைவர் அவர்கள் பேசும்போது கூட, எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்று தமிழ்நாட்டில் - குறிப்பாக, நாகையிலே அந்தப் பகுதியிலே அமைய வேண்டுமென்ற கருத்தை எடுத்துச் சொன்னார்கள். நேற்றும், இன்றும் பேசிய கட்சிகளின் தலைவர்களும், கட்சிகளின் உறுப்பினர்களும் தமிழகத்திலே எங்கெங்கே, இந்த மாநிலம் முழுவதும் தொழில்கள் பொங்கிப் பெருகவேண்டுமென்ற சாத்தியக் கூறுகளையெல்லாம் எடுத்துரைத்திருக்கிறார்கள். நாம்