பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

109

சேலம் இரும்பாலை பற்றிக்கூட இங்கே அனைவரும் கேட்டிருக்கிறார்கள். காலையில் நம்முடைய திரு. ரமணி அவர்கள் இங்க பேசினார்கள். திரு. பாண்டியன் அவர்கள் இங்கே பேசினார்கள். நம்முடைய காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் அவர்கள் பேசினார்கள். எல்லோருமே பேசியிருக்கிறார்கள். சேலம் இரும்பாலைத் திட்டத்திற்காக இந்த ஆட்சி தொடர்ந்து வாதாடிக் கொண்டு இருக்கிறது. இந்த ஆட்சி இந்தத் திட்டத்திற்காக வாதாடவில்லை என்ற ஒரு தவறான பிரச்சாரம் சில ஏடுகளில் இன்றைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சேலத்திலே இரும்பாலை வேண்டும் என்பதற்காக வாதாடி, போராடி, அதிலே வெற்றி பெற்றது அன்றைக்கே 1971-ஆம் ஆண்டிலேயே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பதை யாரும் மறந்திருக்க இயலாது. ஆனால் அன்றைக்கு அனுமதிக்கப்பட்ட அந்த சேலம் இரும்பாலை நாம் நினைத்தவாறு அமையாமல் வேறுமாதிரி அமைந்துவிட்டது. எனவேதான் இப்போதுகூட நான் இந்தியப் பிரதமர் மாண்புமிகு திரு. வி. பி. சிங் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

"Dear Prime Minister,

On the basis of the representation made by me to the late Thirumathi Indira Gandhi, the Salem Steel Plant was approved in 1970. Accordingly in original detailed project re- port it envisaged the manufacture of stainless steel, cilicon steel and special steel and installation of hot rolling and cold rolling facilities. However only a cold rolling complex for the produc- tion of 32,000 tonnes of stainlees steel sheet were commis- sioned in 1981 in the first stage. The original conception of an integrated steel plant has thus been grossly diluted and what has been installed in Salem is largely in the nature of a Stainless Steel Rolling Mill. Our Government has been representing from time for the setting up hot rolling facilities to enable the upstream integration of this plant. We are aware that considerable investment is taking place in North India in