பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

தொழில்துறை பற்றி

மிகக் குறைவானது என்று குறிப்பிட்டார்கள். 1987-88ஆம் ஆண்டில் மின்சாரத்திற்கான திட்ட ஒதுக்கீடு ரூ. 407.63 கோடி என்று இருந்தது. ஆனால் செலவிடப்பட்ட தொகை ரூ. 372.29 கோடிதாதன். 1988-89 ஆம் ஆண்டில் அப்போது திட்டத்திலே, இந்த அரசின் அப்போதைய ஆண்டு திட்டமே 1,457 கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டு, அந்த அறிவிப்புக்குள்ளே அடங்கியதாக மின்சாரத்திற்கு ரூ. 502 கோடி என்று சொல்லப்பட்டது. ஆனால் 1457 என்ற திட்டமே கூட 1202 கோடி ரூபாய்க்கு சுருங்கிவிட்ட காரணத்தால் இந்த 502 கோடி ரூபாய் மின்சார ஒதுக்கீடு கூட 352.53 கோடி ரூபாய் என்ற அளவு சுருங்கிவிட்டது. இந்த 352 கோடி ரூபாயோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இப்போது நாம் 1990-91-ல் மின்சாரத்திற்கு என 457 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பது அதிகமானது என்கின்ற உண்மை தெளிவாகத் தெரியும். அது மாத்திரமல்லாமல், 1990-91-ல் கூடுதலாக 287 மொகவாட் உற்பத்தி செய்ய நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம். கடந்த ஆண்டு 1989-90-ல் தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் திட்டங்களின் வாயிலாக 235 மெகாவாட்ஸ், மத்திய அரசு செயல்படுத்துகின்ற திட்டங்களின் வாயிலாக 118 மெகாவாட்ஸ், ஆக மொத்தம் 353 மெகாவாட்ஸ் உற்பத்தித் திறனை அதிகரித்தும், 1988-89 ஆம் ஆண்டில் மின் உற்பத்தி மற்றும் இதர நிலையங்களிலிருந்து பெறப்பட்ட மின்சாரம் எல்லாவற்றையும் சேர்த்து, மொத்தம் 17,585 மில்லியன் யூனிட்தான் வழங்கப்பட்டது. 1989-90-ல் பல இடையூறுகளுக்கு இடையிலே 18,672 மில்லியன் யூனிட் என்ற அளவுக்கு அதனை உயர்த்தினோம். 1990-91-ல் 21,089 மில்லியன் யூனிட் என்ற அளவுக்கு அது எட்டும் என்று எதிர்ப் பார்க்கின்றோம். 8-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 300 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தித் திறனை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

அவை உறுப்பினர்கள் அனைவருக்கும், ஒன்று நன்றாகத் தெரியும், வடசென்னை மின் நிலையம் அறிவிக்கப்பட்டு, இடத் தகராறு காரணமாக அது தொடங்கப்படாமல் இருந்தது. 500 கோடியிலே ஆரம்பிக்கப்பட வேண்டியது அந்தத் திட்டம். அந்த இடத்தகராறை இந்த அரசு வந்த பிறகுதான் தீர்த்து, இப்போது 700 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தை ஆரம்பிக்கின்ற