பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

தொழில்துறை பற்றி

லை

தான் அவர்களிடத்திலே உள்ளது. இந்தத் தொழில் நுட்பத்தைப் பற்றிய திட்டவட்டமான நிலைமைகள் அவர்களிடத்திலே இல்லாத காரணத்தால் அவர்களே இவர்களுடைய உதவியை நாடி, டாட்டா கன்சல்டன்சியைப் பயன்படுத்தி அவர்கள் அதனைக் கோரியிருக் கிறார்கள். வேதாரண்யம் பகுதியிலே காஸ்ட்டிக் சோடா ஆ நிறுவுவதற்குத் தேவைப்படும் 15 மெகாவாட் மின்சாரத்தைக்கூட தமிழ்நாடு மின்சார வாரியம் தருவதற்குத் தயாராக இருக்கிறது. இவ்வளவு ஏற்பாடுகளும் நடந்து விட்ட காரணத்தால், இந்த இரண்டு தொழிற்சாலைகளும் நிச்சயமாக வேதாரண்யம் பகுதியிலே வரும் என்ற உறுதியை நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

என்.ஆர்.ஐ.-யைப் பற்றிப் பேசப்பட்டது. நான் முதலிலே கோடு காட்டினேன். என்.ஆர்.ஐ-யைப் பொறுத்தவரையிலே இங்கே நம்முடைய நண்பர் பொன்னுசாமி அவர்கள் சொன்னார்கள். பழனி பெரியசாமிக்குப் பல இடையூறுகளை யெல்லாம் தந்து விட்டோம் என்று, அவர் இங்கே ஒரு ஓட்டல் கட்டுவதற்குக் கடந்த அரசில், அந்த அரசோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அது ஒரு ஜாயிண்ட் செக்டார் என்றெல்லாம் கூடப் பேசப்பட்டது. “பல்லவா ஓட்டல்” என்றெல்லாம் பேசப் பட்டது. அதிலே ஒன்றும் தவறு இருப்பதாக நான் சொல்ல மாட்டேன். ஆனால், தவறு என்னவென்றால், அவருக்காக ஒரு இடத்தைக் கொடுத்து விட்டு, அந்த இடத்தினுடைய மதிப்பு ஒரு கோடியே எழுபத்தைந்து இலட்சம் என்று சொன்னார்களே, அது தான் தவறு, நாற்பது கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு இடத்திற்கு, ஒன்றே முக்கால் கோடி ரூபாய் என்று மதிப்பிட்டு, அந்த ஒன்றே முக்கால் கோடி ரூபாயைக்கூட அவர் தரவேண்டியதில்லை, அரசு ஒரு பங்குதாரராக, அந்த ஒன்றே முக்கால் கோடி ரூபாய் தருகிறது என்ற காரணத்தினாலேதான், நம்முடைய அரசின் நிலம் வீணாக யாரிடத்திலோ போய்ச் சேரக்கூடாது என்பதற்காகத்தான் அதை மீண்டும் அரசே எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்தோமே அல்லாமல், தனிப்பட்ட யாரிடத்திலும் எந்த விரோதமும் கிடையாது. அவர்கள் ஒரு சர்க்கரை ஆலையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலே நாம் ஒன்றும் தவறாகக் குறுக்கிட வில்லை. இது நியாயமான குறுக்கீடு. ஏனென்றால், நாற்பது கோடி