பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

121

ரூபாய் பெறுமானமுள்ள ஒரு நிலத்தை, யாரோ ஒருவருக்குத் தனியாக ஒன்றே முக்கால் கோடி ரூபாய்க்கு, அதுவும் அரசு ஒரு பங்குதாரராகச் சேர்த்து, பணத்தையும் பெறாமல் ஒரு நிலைமையை ஏற்படுத்துவது என்றால், அதை இந்தப் புதிய அரசு ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்காகத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டதே தவிர, வேறு அல்ல.

அதற்காக, என்.ஆர்.ஐ. மக்கள் யாரும் இங்கே வராமல் போய் விடவில்லை. நம்முடைய இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் கூட அதைப்பற்றிப் பேசினார்கள். நம்முடைய உகம்சந்த் கூட அதைப்பற்றிப் பேசினார்கள். என்.ஆர்.ஐ. சார்பாகப் பலபேர் தமிழ்நாட்டிலே தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மெட்ராஸ் ஹைட்ராலிக் ஹோஸ் பைப் பிரைவேட் லிமிடெட், ஏறத்தாழ மூன்று கோடி ரூபாய்; மிஸ்டர் விஸ்வநாத் என்பவர், கென்யா நாட்டுக்காரர், அங்கே இருப்பவர், அவர் நடத்திக்கொண்டு இருக்கிறார்.

அதைப்போலவே, மீஞ்சூர் ஷெல் கேஸ்ட்டிக் பிரைவேட் லிமிடெட், நாடிமுத்து அண்ட் எம்.எஸ். துரை, சவுதி அராபியா. அவர் இங்கே தொழில் நடத்துகிறார்.

கிரசண்ட் செராமிக், ஜான் சுந்தரராஜன், யூ.ஏ.ஈ., பிரீஸ் ஓட்டல் பிரைவேட் லிமிடெட், மெசர்ஸ் ஆர். சிவராமன் அண்ட் அசோசியேட், ஸ்ரீலங்கா, உமா ஒயர் பிராடக்ட் பிரைவேட் லிமிடெட், தசரதன், நைஜீரியா, வஸ்திரா அப்பியரல்ஸ் பிரைவேட் லிமிடெட், நித்தியானந்தம், இந்தோநேஷியா, அதைப்போல, யு.எஸ்.ஏ. விலேயிருந்து, சிங்கப்பூரிலேயிருந்து, கல்ப் இலேயிருந்து, மலேசியாவிலேயிருந்து, யூ.கே. விலேயிருந்து, பிரான்சிலேயிருந்து, இப்படி 19 பேர் கிட்டத்தட்ட ஐம்பது கோடி ரூபாய் அளவுக்கான தொழிலைத் தமிழ்நாட்டிலே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். என்.ஆர்.ஐ. என்றால் நமக்கு ஒன்றும் அலர்ஜி இல்லை. அவர்கள் நடந்து கொள்கிற விதத்தில் ஏற்படுகிற முரண்பாடுகள், நம்முடைய அரசுக்கு அல்லது நாட்டிற்கு, நம்முடைய மக்களுக்குத் தீமை பயக்கிற வகையிலே வருகிற நிலைமைகளைத்தான், அந்த ஊழல்களை மூடி மறைக்கின்ற