பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

தொழில்துறை பற்றி

நேரத்திலே அதை வெளிக் கொணர்ந்து அவைகளை நாம் அடையாளம் காட்ட வேண்டிய நிலைமைக்கு ஆளாகிறோமே அல்லாமல் வேறல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மூடப்பட்ட ஆலைகளைப் பற்றிப் பேசப்பட்டது நம்முடைய ரமணி அவர்கள் காலையில் அதைப்பற்றி விரிவாகப் பேசி இருக்கிறார். மூடப்பட்ட ஆலைகளைத் திறப்பதற்கான முயற்சி களில் அரசு ஈடுபடும் என்று தேர்தல் நேரத்தில் அறிவித்ததற் கிணங்க, தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ், அவிநாசி 10-3-1989-ல் திறக்கப்பட்டது. வாசுதேவா டெக்ஸ்டைல்ஸ், கோவை 13-3-1989-ல் திறக்கப்பட்டது. ஆர்.ஏ.வி. டெக்ஸ்டைல்ஸ், கோவை 12-4-1989-ல் திறக்கப்பட்டது. பாலாஜி காட்டன் மில்ஸ், சேலம் 21-8-1989-ல் திறக்கப்பட்டது. ருக்மணி மில்ஸ், சிலைமான் 7-8-1989-ல் திறக்கப் பட்டது. சற்குணா டெக்ஸ்டைல்ஸ், கோவை 10-7-1989-ல் திறக்கப் பட்டது. பாலாஜி ஸ்பின்னர்ஸ், கோவை 25-11-1989-ல் திறக்கப் பட்டது. அமராவதி டையிங் அண்ட் காட்டன் மில்ஸ் 8-11-1989-ல் திறக்கப்பட்டது. தெய்வசிகாமணி ஸ்பின்னிங்க மில்ஸ் 1-1-1990-ல் திறக்கப்பட்டது. ஆக மூடப்பட்டிருந்த ஆலைகளில் 9 ஆலைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. திறக்க உத்தேசித்து, மத்திய அரசோடு பேச்சுவார்த்தை நடத்தப்படுகிற நிலையில் உள்ள ஆலைகள் 6. மிகச் சிறியவை என்பதாலும், அவைகளை ஏற்று நடத்தினால் லாபகரமாக இராது என்பதாலும் விடப்பட்ட ஆலைகள் 7. இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்காமல் ஆய்வில் உள்ள ஆலைகள் 8. அரசாங்கமே ஏற்று நடத்துவது என்ற முடிவை அறிவித்து மத்திய அரசுக்கு அன்று எழுதி இதுவரையில் சரியான பதில் கிடைக்காத காரணத்தால் அண்மையில் இங்கே வந்த அமைச்சர் யாதவ் அவர்கள் இதைப்பற்றி நான் கவனிக்கிறேன் என்று சொன்ன உறுதிமொழியின் காரணமாக நம்முடைய அமைச்சர்கள் அங்கே டெல்லிக்குச் செல்கிறார்கள். நம்முடைய கைத்தறித் துறை அமைச்சர் அவர்களும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்களும் டெல்லியில் மத்திய அரசு அமைச்சர்களைக் கலந்து பேசி நல்ல முடிவோடு இன்னும் இரண்டொரு நாட்களில் வருவார்கள் என்பதையும், இந்த 6 ஆலைகள் வெகு விரைவில் திறக்கப்படும் என்பதையும், நான் இங்கே மிகுந்த மகிழ்ச்சியோடு அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)