பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

125

படித்துவிட்டு, அப்படிச் சொல்லியிருக்கிறார். கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட தொகை டி.ஐ.ஐ.சி.-யின் 103.97 கோடி ரூபாய். வழங்ப்பட்ட தொகை 60.78 கோடி ரூபாய். இதைத்தான் கவனிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்டது ரூ. 103 கோடி, வழக்கப்பட்டது ரூ. 60 கோடி, இப்போது அவர்கள் நமக்கு அறிவித்து விட்டார்கள். நீங்கள் அனுமதிப்பதை அதிகமாகச் சொல்லி, வழங்குவது குறைவாக இருக்கும்போது, அனுமதிப்பதையும் அளவோடு அனுமதியுங்கள் என்று அவர்கள் கூறிய பிறகு இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட தொகை 97.10 கோடி ரூபாயாகவும், வழங்கப் பட்ட தொகை 65.07 கோடி ரூபாயாகவும் அமைந்திருக்கிறது. அதிலே வழங்கப்பட்ட தொகை என்று எடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டு ரூ. 60 கோடி சொச்சம், இந்த ஆண்டு ரூ. 65 கோடி சொச்சம், அதிகமாத்தான் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் கூறிய அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டுதான் ஐ.டி.பி.ஐ. கருத்துக் கூறும்போது எதைச் சொன்னார்களோ, அந்த அடிப்படையில் நாம் இதை இன்றைக்கு அனுமதித்து வழங்கியிருக்கிறோமே அல்லாமல் வேறு அல்ல. இன்னொன்று சொன்னார்கள், நல்ல உதாரணத்தோடு Old wine in new bottle or different bottles என்று சொன்னார்கள். மலிவு விலை மது பற்றிப் பேசப்படுகிற நேரத்தில் அவர்கள் ஒயினைப் பற்றிப் பேசினார்கள். பேசிவிட்டு, அந்த விற்பனை வரி ஒத்திவைப்பு, சேல்ஸ்டாக்ஸ் deferral என்பதும் Interest free Sales Tax Loan என்பதும் இரண்டும் ஒன்றுதான். அதனால்தான் இது, ஒரேவிதமான ஒயினை இரண்டு பாட்டில்களில் ஊற்றித் தரப்படுகிறது என்ற விதத்திலே பேசினார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. உண்மை என்ன வென்றால், வட்டியில்லா விற்பனை வரிக் கடன் திட்டத்தில் விற்பனை வரியை முறையாகச் செலுத்திவிட்டு பிறகு ஒரு உச்ச வரம்புக்கு உட்பட்டு அதற்கு ஈடாக அரசு தொழில் வளர்ச்சி நிறுவனங்களிடமிருந்த வட்டி இல்லாத கடன் வழங்கும், அதுதான் விற்பனை வரிக் கடன் திட்டம். விற்பனை வரியைக் கட்டுவதற்கும் வட்டியில்லாத கடன் பெறுவதற்கும் சில நேரங்களில் கால இடைவெளி ஏற்பட்டு தாமதம் ஏற்படுகிற காரணத்தால் அதற்கு நிதி நெருக்கடி, நிறுவனத்திற்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டுதான் விற்பனை வரி தள்ளி வைப்புத் திட்டத்தினை முழுமையாக இந்த அரசு செயல்படுத்தியது.