பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

தொழில்துறை பற்றி

களைத் தனியாக அறிவித்து அவர்களுக்கு மேலும் சில சலுகைகளைச் செய்யலாம் என்ற முயற்சியை இப்போது அரசு மேற்கொண்டிருக்கிறது, அதை அறிவிக்க நான் விரும்புகிறேன். இதை எப்படி இந்த பின்தங்கிய பகுதி, மிகவும் பின்தங்கிய பகுதி என்று நீங்கள் நிர்ணயிக்கின்றீர்கள் என்று கேட்டால் பின்தங்கிய பகுதி என்பது தொழிலாளர்களுடைய சராசரி விகிதம். அதிலே மாநில சராசரி விகிதம், 1.26 விழுக்காட்டிற்குக் குறைவாகத் தொழிலாளர்கள் இருக்கின்ற பகுதி. அதே வட்டத்தில் பெரிய தொழில்களோ, நடுத்தரத் தொழில்களோ ரூ. 15 கோடிக்குக் குறைவாக இருக்கவேண்டும். அவைகளை எல்லாம் பி.சி. தங்கிய பகுதியிலே சேர்க்கின்றோம். இந்த அடிப்படையில் 105 இடங்களை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதிலே மீண்டும் எம்.பி.சி. என்று எப்படி நிர்ணயிக்கிறோம் என்றால் அந்த வட்டத்தில் ஆலைத் தொழிலாளர்களாக சராசரி 25 சதவிகிதத் திற்குக் குறைவாக இருக்கவேண்டும். அந்த வட்டத்தில் நடுத்தரத் தொழில்கள் அல்லது எந்தப் பெரிய தொழிலும் இல்லாமல் இருக்க வேண்டும். அந்த அடிப்படையிலே 30 பின்தங்கிய வட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

பின்

அவைகளுடைய பெயர்களை நான் இங்கே படிக்க விரும்புகிறேன். செங்கை - அண்ணா மாவட்டத்தில். பள்ளிப்பட்டு, தர்மபுரியில் பென்னாகரம், திண்டுக்கல் காயிதே மில்லத் மாவட்டத்தில் வேடசந்தூர், கொடைக்கானல். காமராசர் மாவட்டத்தில் திருச்சுளி, மதுரையில் உசிலம்பட்டி, திருநெல்வேலி- கட்டபொம்மன் மாவட்டத்தில் தென்காசி, இராதாபுரம் பெரியார் மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம்; சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, தென்னாற்காடு மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில், திருக்கோவிலூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் - யாரும் பொறாமைப் படக்கூடாது. அங்கே தொழிலே இல்லாத மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம், வலங்கைமான், குடவாசல். பேராவூரணி, நன்னிலம், ஒரத்தநாடு, சீர்காழி, பட்டுக்கோட்டை, திருவாரூர், திருத் துறைப்பூண்டி. (சிரிப்பு, குறுக்கீடு). அவர் கேட்ட அந்த பைப் லைன் வந்தால் அங்கேயெல்லாம் தொழில் வரும்.